India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இறைச்சி மற்றும் இதர மீன், மாமிச விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், தடையை மீறி செயல்பட்ட 199 கடைகளுக்கு மொத்தம் 62,450 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக இந்திரா நகர் தொகுதியில் 33 கடைகளுக்கு 16,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பாகூர், குருவிநத்தம் இளையபெருமாள் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதன்பின், வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்று வந்த அவர், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுவை வில்லியனுார், சுல்தான்பேட்டை சுஜன் இவர் சுல்தான்பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதி அசார், இஸ்மாயில், ஜலால், கரிக்கலாம்பாக்கம் பாஸ்கரன் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் அசார், கோழி கழிவுகளை கொட்டும் வாளியில் 10 கிலோ கோழிக் கறியை மறைத்து எடுத்து சென்று விற்றுள்ளார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து உடந்தையாக செயல்பட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரம் பாண்டிச்சேரி, ஆனால் சுற்றுலாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் இடமாகும் அப்படி நாம் அங்கு காண வேண்டிய இடங்கள் 1. பாரடைஸ் பீச், 2. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், 3. ஆரோவில், 4. அரிக்கமேடு, 6. செரினிட்டி கடற்கரை 7 . சுன்னம்பார் படகு இல்லம், 8. தாவரவியல் பூங்கா, 9. வெள்ளை நகரம், 10. மணக்குள விநாயகர் கோயில். உங்களுக்கு தெரிந்த இடத்தை கமெண்ட் செய்யவும்…

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன.17) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில் மெல்லிசை இசை, பறையாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், மல்லர் கம்பம், வாத்திய இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், இன்று (ஜன.17) 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி வங்கி ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள வங்கிகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம் வானூர் அருகே அமைந்துள்ள வீரனார் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளக்கரையில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கலை படையலிட்டு ஆண்கள் மட்டுமே உண்டனர். இப்பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <
Sorry, no posts matched your criteria.