Pondicherry

News May 25, 2024

புதுவை செவிலியர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

புதுவை அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் இந்திராணி செவிலியர்கள் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு இயக்கம் சார்பில் நேற்று நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் ராஜேஸ்வரி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேசப்பட்டது.

News May 24, 2024

காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் இன்று பல்வேறு துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 24, 2024

புதுச்சேரி: சிகரெட் தராததால் கழுத்தை அறுத்த நபர்!

image

புதுச்சேரி – ஆம்பூர் சாலையில் உள்ள டீக்கடையில் குடிபோதையில் இருந்த குணா என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். டீ கடைக்காரர் தர மறுக்கவே, வாய் சண்டை கைலப்பாகி டீக்கடைக்காரரின் கழுதை அறுத்துவிட்டு குணா தப்ப முயன்றுள்ளார். அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில், டீ கடைக்கு எதிரே உள்ள சாலையோரத்தில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 24, 2024

ரகளையை தட்டிக்கேட்ட டீக்கடைக்காரருக்கு கத்தி குத்து

image

முத்தியால்பேட்டை சேர்ந்த பிரபாகரன் இவர் செஞ்சி சாலை சந்திப்பில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று டீக்கடை முன்பு போதையில் வாலிபர் தகராறு செய்தார். பிரபாகரன் அந்த வாலிபரை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் பிரபாகரன் கழுத்தில் குத்தினார். பிரபாகரனை சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 24, 2024

புதுவையில் செவிலியர் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு

image

புதுவை சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்திய நர்சிங் கவுன்சில் பிஎஸ்சி நர்சிங சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு புதுச்சேரி மாநிலத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு செண்டாக் மூலம் நடத்தப்படும் என்றும், விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி‌ உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 23, 2024

புதுச்சேரி: வியாபரிகளுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளின் உள்ளாட்சி துறை தொடர்ச்சியாக இன்று இயக்குநர் சக்திவேல் நேரடி மேற்பார்வையில் நகராட்சி ஆணையர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மிஷன் வீதியில் உள்ள கடைகளை பார்வையிட்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

News May 23, 2024

புதுச்சேரி: பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு

image

புதுச்சேரியில் இனி பி.எஸ். செவிலியா் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பசுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு வெளியிட்டுள்ள குறிப்பில், 2024-25ஆம் கல்வியாண்டுக்கான தோ்வுத் தேதி, பொது நுழைவுத் தோ்வு நடத்துவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி ஆகியவை சென்டாக் இணையதளத்தில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 23, 2024

புதுவையில் இ-பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசனை

image

புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இ-பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், போக்குவரத்துறை செயலர் முத்தம்மா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரி சீதாராம ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் உடன் இருந்தார்.

News May 23, 2024

பாஜகவில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

image

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் இன்று 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனை அடுத்து அமைச்சர் அவர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

News May 23, 2024

புதுவையில் ரூ.3,000 வரை அபராதம்

image

புதுவையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மேலும் சி.சி.டி.வி., மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு 133 குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். என புதுவை உள்ளாட்சித்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!