Pondicherry

News January 22, 2026

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு புதிய பொறுப்பு

image

புதுச்சேரி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் கந்தசாமி, தற்போது கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, பணிகளை விரைவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் இந்த அதிரடி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் கந்தசாமி இனி மாநில தேர்தல் துறையில், துணை தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார்.

News January 22, 2026

புதுச்சேரி முதல்வரை கடற்படை தளபதி சந்திப்பு

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், இன்று (22.01.2026) முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இந்திய கடற்படையில் அக்னி வீரர்கள் மற்றும் அதிகாரிகளாக சேர ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து தளபதி அவர்கள் விளக்கமளித்தார்.

News January 22, 2026

புதுச்சேரி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

புதுச்சேரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

News January 22, 2026

புதுவை: ஷீ பாக்ஸ் இணையத்தில் பெண்கள் புகார் அளிக்கலாம்

image

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்களை தெரிவிக்கக, ஒரே சாளர செயல்முறை அமைப்பாக பாலியல் தொந்தரவு மின்னணு புகார் பெட்டி (<>ஷீ பாக்ஸ்<<>>) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புகார்களை இதன் மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுளது.

News January 22, 2026

புதுவையில் கார் மோதி மூதாட்டி பலி

image

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மல்லிகா (80). இவர் தனது மகன் மண்ணாங்கட்டி பராமரிப்பில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மல்லிகா பெரிய காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

புதுவை: அரசு மரியாதையுடன் முன்னாள் நீதிபதி உடல் நல்லடக்கம்

image

புதுச்சேரியில், அரசு மரியாதையுடன் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமியின் (99) உடல், நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து உப்பளம் கல்லறையில் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலா் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

News January 22, 2026

புதுவை: ATM-வில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

புதுவை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

புதுச்சேரியில் உதவித்தொகை உயர்வு

image

புதுச்சேரியில், மாதாந்திர முதியோர் உதவித்தொகையை, ரூ.500 உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தற்போதைய ரூ.2,500 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் விதவை மகள் திருமண நிதியுதவி தொகை ரூ.30,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தி முதல்வர் அரசனை வெளியிட்டுள்ளார்.

News January 22, 2026

புதுவை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!