Pondicherry

News January 20, 2026

புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

புதுவையில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டமங்கலம் கோட்டம், திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதனால் திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இவ்வாராக மின் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 20, 2026

புதுவை: முதல்வர் மீது பாஜக அமைச்சர் கடும் அதிருப்தி

image

புதுச்சேரி மாநிலத்தில், பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக-வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் தனக்கு இலாகா ஒதுக்கப்படாதது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு இலாகா வழங்கக்கூடாது என்பதில் ஏதோ ஒரு சதி நடக்கிறது என, செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

News January 19, 2026

புதுவை: துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

image

புதுவை மாநிலம் காரைக்காலில், சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49-வது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும், சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.

News January 19, 2026

புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 19, 2026

புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News January 19, 2026

புதுவை: தேவை இல்லாத CALL-க்கு இனி END!

image

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

புதுவை: SI உடற்தகுதி தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கான உடற்தகுதி தேர்வு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் இன்று (19-1-26) தொடங்கி பிப்.7-ம் தேதி வரையில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கு இன்று முதல் பிப்.3-ம் தேதி வரையும், பெண்களுக்கு பிப்.4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது. இதில் தகுதி பெறுவோருக்கு வருகிற பிப்.22-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News January 19, 2026

புதுவை: மாத்திரை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்

image

உறுவையாறு கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி மோனிஷா (32) மன அழுத்தம் காரணமாக, சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அவர் அதிகமாக சாப்பிட்டு, மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2026

புதுவை: நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

image

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-1-26) கிதர்பள்ளி வீதி, டூப்லெக்ஸ் வீதி மற்றும் ஆணைபிள்ளை மரைக்கார் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைப்படும் என்று காரைக்கால் மின்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!