Pondicherry

News January 20, 2026

3 மாத்திரைக்கு தடை விதித்த புதுவை அரசு

image

புதுச்சேரியில், 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில், அவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. புதுவை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் அனந்தகிருஷ்ணன், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். மேலும் மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 20, 2026

இந்திய தூதருக்கு புதுவை முதல்வா் கடிதம்

image

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த, கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி, ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். விரைவில் ஈரானில் அவரை கண்டறிந்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

News January 20, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

News January 20, 2026

புதுவை தோட்டக்கலைத் துறை 50% மானியம் அறிவிப்பு

image

புதுச்சேரியில் தோட்டக்கலைத் துறையின் கீழ் காய்கறி (நாட்டு ரகம்/வீரிய ஒட்டு) மற்றும் மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் வாங்கும் விதைகளுக்கான செலவில் 50% மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (20.01.2026) முதல் 05.02.2026 வரை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம், கிராமப் பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் வழங்கப்படுகின்றன.

News January 20, 2026

புதுச்சேரி கிராம வங்கியில் புதிய திட்டம் துவக்கம்

image

புதுச்சேரி கிராம வங்கியில் ஐஸ்வர்யம் என்ற புதிய சிறப்பு வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 555 நாட்களுக்கு அதிக வட்டி தரும் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை, கிராம வங்கி தலைவர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும்; மற்றவர்களுக்கு 7.0 சதவீதம் வட்டியும் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அனைத்து கிராம வங்கிகளும் தொடங்கப்படும் என கூறியுள்ளனர்.

News January 20, 2026

புதுச்சேரியின் பண்டையகால நகரம் பற்றி தெரியுமா?

image

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு கிராமம் சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு கி.மு 200 முதல் கி.பி 200 வரை கடல் வாணிபம் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இங்கிருந்து ரோம் நகரத்திற்கு கடல் வாணிபம் நடைபெற்றுள்ளது. இங்கு ரோம் அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விடத்தை பற்றி பிறருக்கும் பகிரவும்..!

News January 20, 2026

புதுகை: இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து அறிவிப்பு!

image

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தீவிர வாக்காளர் பட்டியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

புதுவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 20, 2026

புதுவை: நகை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

image

புதுவை, சாரம் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி சுந்தரமூர்த்தி (63). இவர் நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்றபோது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 20, 2026

புதுவை: சீனியர் எஸ்.பி-க்களுக்கு பறந்த உத்தரவு

image

சீனியர் எஸ்.பி லட்சுமி சவுஜன்யா, நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் 16 சீனியர் எஸ்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுவையில் உள்ள மொத்த காவல் நிலையங்களிலும் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.‌ மேலும் இந்த ஆய்வறிக்கையை 6 பிரதிகளாக தயார் செய்ய வேண்டும். பிப்.15-க்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமையக சீனியர் எஸ்.பி அனில்குமார் லால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!