Pondicherry

News May 30, 2024

நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

image

புதுவையில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று நாளை 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதுவரை 15, 959 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

News May 30, 2024

புதுவை முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிசிசி தலைவர் கிருஷ்ணராஜ் ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News May 29, 2024

புதுச்சேரியில் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

image

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜூன்.04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை 3 சுற்றுகளாக நடக்கும் என்றும் இரவு 7 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று தெரிவித்தார்.

News May 29, 2024

புதுவை: 500 அரசு அலுவலர்கள் நியமனம்

image

புதுவையில் ஜூன் 4-ஆம் தேதி 93 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த பணியில் 500 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் முழுவதும் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வி.பி.பாட் எந்திரத்தில் உள்ள வாக்குப்பதிவு காகிதங்களை எண்ணவும் வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News May 29, 2024

மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

image

காரைக்காலில் உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனித் திருவிழா ஜூன் மாதம் ஜூன்.19ஆம் முதல் தேதி முதல் ஜூன்.22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு, திருவிழா ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், கோயில் நிர்வாக அதிகாரி‌ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 29, 2024

புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்போசிஸ் ஒப்பந்தம்

image

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இம்போசிஸ் ஆகியவை கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளின் பல்வேறு காலங்களில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் விழாவில் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

News May 29, 2024

மே 31ல் தூய இருதய ஆண்டவா் ஆலய பெருவிழா

image

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற தூய இருதய ஆண்டவா் பசிலிக்காவின் 117-ஆம் ஆண்டு பெருவிழா வரும் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதில், புதுவை, கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் கலிஸ்ட், மீரட் மறை மாவட்ட ஆயா் பாஸ்கா் ஏசுராஜ் ஆகியோா் பங்கேற்று கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைக்கின்றனா் . இதையடுத்து தினமும் காலை, மாலையில் திருப்பலிசிறப்பு மறையுரை, சிறிய தோ் பவனி நடைபெறுகின்றன

News May 29, 2024

ஜிப்மரில் முதுநிலை செவிலியா் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மரில் எம்.எஸ்சி., எம்.பிஎச்., பி.பி.டி., பி.ஜி.டி, பிஜி. எஃப் ஆகிய முதுநிலை செவிலியா் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் ஜூன் 20-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்
ஜிப்மா் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியா் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தோ்வு வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

News May 29, 2024

இளம்பெண்க்கு வன்கொடுமை – வாலிபருக்கு வலைவீச்சு

image

புதுவை பாகூர் 23 வயதுள்ள இளம்பெண், கடலூரில் பணிபுரிகிறார். இவருக்கும், கொம்மந்தான் மேடு தினேஷ்க்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவரை திருமணம் செய்வதாக ஆசை கூறி, அவருடன் தினேஷ் உல்லாசமாக இருந்தார். இந்நிலையில், தினேஷ், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நேற்று அந்த இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

News May 29, 2024

புதுச்சேரி முதல்வருக்கு வைகோ கோரிக்கை

image

திராவிட இயக்க முது பெரும் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான முத்துவின் நினைவாக அவரின் பெயரை புதுவை முதலியார் பேட்டை ரோடியர் மில் வீதிக்கு சூட்ட வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சர் ரங்கசாமிக்கு கோரிக்கை மனு எழுதி உள்ளார். அந்த மனுவை புதுச்சேரி மதிமுக நிர்வாகிகள் நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சரை சந்தித்து வழங்கினர்.

error: Content is protected !!