Pondicherry

News May 20, 2024

இலவச சென்டாக் விண்ணப்பிக்கும் முகாம்

image

புதுச்சேரி வில்லியனூர் மேல் திருக்காஞ்சி மண்வாசம் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருக்காஞ்சி அருகே உள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் ஆலயத்தில் இலவசமாக சென்டாக்கில் விண்ணப்பம் செய்யும் பணி மேற்கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு உதவினர்.

News May 19, 2024

புதுச்சேரி அருகே வெளுத்து வாங்கும் மழை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இன்று திடீரென்று காரைக்கால் நகரப் பகுதி நெடுங்காடு, கோட்டுச்சேரி, அம்பகரத்தூர், திருநள்ளார், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 19, 2024

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் மே.22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே.24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News May 19, 2024

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் மே.22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே.24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News May 18, 2024

போக்குவரத்தால் திணறிய புதுச்சேரி நகரம்

image

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரி நோக்கி படையெடுத்து வருவதால் இன்று நகரத்தின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் திணறினர். வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

News May 18, 2024

திருநள்ளாறு கோயிலில் நாளை தேரோட்டம் விழா

image

காரைக்கால்: திருநள்ளாரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி தேர் என மொத்தம் 5 தேர்கள் தயார் நிலையில் உள்ளது.

News May 18, 2024

தேசிய பால புரஸ்கார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

image

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2025ம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் <>LINK<<>> என்ற இணையம் வழியாக வரும் ஜூலை 31ம் தேதி வரை பெறப்படுகிறது. .புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த வீர, தீர செயல், விளையாட்டு, சமூக சேவை,புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கிய 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

News May 18, 2024

புதுச்சேரி: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (மே 18) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம்

image

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சட்டங்கள் குறித்த பயிற்சி முகாமை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஒரு தேர்தல் என வரும்போது நிச்சயமாக மக்கள் கவனமும், ஊடகத்தின் கவனமும் முன்னேற்றத்தை நோக்கி மாறும். அதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் அத்தியாவசியம் என்று கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

News May 17, 2024

தேசிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பிக்கலாம்

image

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்த்ரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் இணையம் வழியாக https.//awards.gov.in 31.07.24 அன்று வரை பெறப்படும், இதில், புதுச்சேரி சார்ந்த வீர தீர செயல், விளையாட்டு, சமுக சேவை இவற்றில் சிறந்து விளங்கிய 5 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!