India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் & வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புதுவை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.

திருப்பதி – புதுச்சேரி இடையே இயக்கப்படும் தினசரி மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 16111) கால அட்டவணையில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் வரும் குடியரசு தினமான ஜன.26 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்களில் ரயில் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <

புதுவை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் உரிய அனுமதியின்றி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு.போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஒப்பந்தம், தேவைப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும்.பணிக்கு வராத நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஏ.எஸ். சிவகுமார் அறிவிப்பு..

புதுவையில் சட்டசபை தேர்தலையொட்டி, காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் புதுவையில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் உள்ள 27 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 35 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.எஸ்.பி. மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, குஜராத் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் மருந்துகளின் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அகமதாபாத்தில் தயாரிக்கப்படும் ரிஸ்பி பிரஸ் டி.ஆர் மற்றும் ஹரித்துவாரில் தயாரிக்கப்படும் மெடிகோப் டி சிரப் ஆகிய இருமல் மருந்துகளும் தற்போது புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.