India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் சமீப காலமாக கொலை கொள்ளை மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வந்தது இந்த நிலையில் புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்பி லட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இன்று காலை ரவுடிகளில் வீடுகளில் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் கண்டாக்டர் பகுதிகளும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 40 பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக துறைமுகத்தில் நிகழ்நேர செயல்விளக்கம், எண்ணெய் கசிவை எதிர்க்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களை காட்சிப்படுத்தியது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடி முன்னிலையில் 4 முறையாக ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஆந்திராவில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது உங்களால் ஏற்படும் மாநிலத்தின் வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
புதுவை அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ரெட்டியார் பாளையம் தொகுதியில் 3 பேர் உயிரிழந்த நிலையிலும், முதலமைச்சரின் ஆணவம், மெத்தனப்போக்கால் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக திறமையற்ற முதல்வர் இச்சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலமாக உயர் ரக நெல், பாரம்பரிய நெல், கரும்பு, மணிலா, எள், பயிறு வகைகள், பருத்தி, சிறுதானிய பயிர்கள் மற்றும் தீவன புல் சாகுபடி செய்யும் மொத்தம் 5,416 விவசாயிகளுக்கு ரூ 4.36.87.290 அளவிலான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியினை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த துயரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களின் துயரங்களிலும் சோகத்திலும் எனது இதயமும் இணைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 இந்தியர்கள் பலியானார்கள் என்ற துயர செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவர் பியூஸ் அகர்வால் என்பவரிடம் டேட்டிங் ஆப் மூலம் பழகிய நண்பரை விடுதியில் பார்க்க சென்றார். அப்போது அந்த அறையில் இருந்த 4 இளைஞர்கள் அவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.65,000 பணத்தை ஆன்லைன் மூலம் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாமக்கல்லை சேர்ந்த 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுவை அரசின் தீயணைப்புத்துறையில் 9 வண்டிகள் 15 ஆண்டுகளை கடந்தவை ஆகும். 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ரூ.5 கோடி செலவில் புதியதாக 10 புதிய தீயணைப்பு வண்டிகளை வாங்க புதுவை அரசு திட்டமிட்டு அதன்படி புதியதாக வாங்கப்பட்டுள்ள 10 புதிய வண்டிகள் புதுவைக்கு வந்து அவை தற்போது கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைத்துள்ளனர்.
புதுவையில் உள்ள அரசு மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் ‘லேட்ரல் என்ட்ரி’ (2-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை) மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 26ஆம் தேதி மாலை 6 மணி வரை சமர்ப்பிக்கலாம். பிற மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.