Pondicherry

News January 29, 2026

புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதேபோல், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

புதுவை: வீட்டில் செல்வம் செழிக்க இத பண்ணுங்க!

image

புதுவை மாநிலம் திருபுவனையில் அமைந்துள்ள கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் முலவரான வரதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

BREAKING: காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா நாளை (ஜனவரி 29) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!

News January 28, 2026

புதுச்சேரியில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடக்கம்

image

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. வேளாண் துறை சார்பில் நடத்தப்படும் இந்த 35வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி, வரும் ஜனவரி 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று தினங்கள் இக்கண்காட்சி நடைபெற உள்ளது என புதுச்சேரி வேளாண் துறை அறிவித்துள்ளது.

News January 28, 2026

புதுச்சேரி: இரங்கல் செய்தி தெரிவித்த முதலமைச்சர்

image

மஹாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் எதிர்பாராத விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அஜித் பவார் மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட தலைவராக விளங்கியவர் என்றும், அவரின் மறைவு அரசியல் வட்டாரத்தில் உணர்ச்சிபூர்வ இழப்பாகும் என்றும், புதுச்சேரி முதல்வர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

புதுச்சேரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.<<>>in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக் செய்து<<>> ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

புதுவை: ஒரே பதிவு எண் கொண்ட வாகனம் பறிமுதல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான ஒரு வாகனத்தின் பதிவு எண்ணிலேயே, மற்றொரு போலி வாகனம் இயங்குவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், அந்தப் போலி வாகனத்தைப் பறிமுதல் செய்து நகரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் கருத்தரங்ககம்

image

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சென்னை தனியார் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்ஜய் தியோடர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, செயற்கை இதய வால்வுகள் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விரிவான சிறப்புரையாற்றினார். பல மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

News January 28, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!