India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

ஜார்க்கண்டை சேர்ந்த தம்பதியினர் பவன்ராய்- பிங்கிகுமாரி, இவர்கள் கிருமாம்பாக்கம் அருகே வசிக்கின்றனர். பிங்கிகுமாரிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இங்குபேட்டரில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிங்கிகுமாரி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு, படுக்க வைத்த சிறிது நேரத்தில் குழந்தை மூச்சி திணறி இறந்தது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

குடியரசு நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பெறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கைலாஷ்நாதன் தேசியக்கொடியை ஏற்றினார்.

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி, புதுச்சேரி காவல்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு இருசக்கர வாகன பேரணி மற்றும் இளைஞர்களின் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடி அசைத்து அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தலைவர் செல்வம், காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

வில்லியனூர், வி.தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஜனா என்ற வாலிபர், இன்று ஆத்துவாயக்கால் பட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென ஜனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜனாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி, தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரை பிடித்த உதவி ஆய்வாளருக்கு துணைநிலை ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், எஸ்.ஐ சுப்பிரமணியனுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு புதுச்சேரி அரசு, துணைநிலை ஆளுநர் விருதுகளை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.