India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிகழாண்டு முழுமையான நிதிநிலை அறிக்கை 12,700 கோடிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, தலைமைச் செயலகத்தில் மாநிலத் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமாா், திருமுருகன், சாய் சரவணன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மின்துறை ஐடிஐ நலச் சங்க பொதுச் செயலாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தியில், மின் துறையில் 750 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கூடுதல் பணி சுமை காரணமாக ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது கவனம் சிதறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தொழிலாளருக்கான காப்பீடு திட்டத்தை அரசு சார்பில் கொண்டு வர வேண்டும் என்றார்.
புதுச்சேரியை சேர்ந்த ரவுடி கருணா ஆயுள் தண்டனை கைதியாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 3 நாட்கள் பரோலில் வெளிவந்து மாயமானார். இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த கர்ணாவை சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்று கைது செய்து புதுச்சேரி அழைத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்கட்டமைப்பு, குடிநீர் ஆதார விரிவாக்கம், பாதாள சாக்கடைத் திட்டங்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பை நவீனமயமாக்கல் போன்ற பல பணிகளை ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் நீண்டகால கடனாகப் பெற்று செயல்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாகிகளுடன் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளதை மாற்றி, இந்த பட்ஜெட்டில் ரேஷன் கடைகள் இயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் தலைமையில் இன்று (ஜூன்.18) நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்துகிறார்களோ அதைப்போல் புதுச்சேரி அரசும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் இன்று தலைமை செயலகத்தில் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியார்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், எழுச்சிமிகு புதுச்சேரி என்பது தான் இக்கூட்டத்தின் முதல்நோக்கம். எழுச்சிமிகு புதுச்சேரி வெறும் கோஷமாக இல்லாமல் நடைமுறையிலும் வெற்றிக்கரமாக மாறும். ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி நேரு-காந்தி வீதி சந்திப்பில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இன்று சிபிஎம் சார்பில் தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை வாபஸ் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
புதுவை ஆளுநர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளேன். முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். வரும் பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கருணா என்பவர் கடந்த ஜூன்.11ஆம் தேதி 3 நாட்கள் பரோலில் வந்துள்ளார். ஜூன்.13ஆம் தேதி சிறையில் ஆஜராக வேண்டிய அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இது குறித்த விசாரணையில் தப்பிச் செல்ல உதவிய கருணாவின் உறவினர்கள் 2 பேரை போலீசார் இன்று (ஜூன்.18) கைது செய்தனர். 5 கொலை உள்ளிட்ட 18 வழக்குகள் கருணா மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி தலைமை செயலகத்தில் இன்று துணைநிலை ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் தலைமையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி, அனைத்து துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.