Pondicherry

News June 20, 2024

யோகா தினம் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வாழ்த்து

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; நம்முடைய ஞானிகளாலும் ரிஷிகளாலும் யோகா கலை உலகிற்கு தரப்பட்டது. அந்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்ற விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலக யோகா தினத்தை முன்னிறுத்தினார். மனிதனுக்கு உடல் நலம் முக்கியம். அந்த உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

News June 20, 2024

ரோகி கல்யான் சமிதி குறித்து ஆட்சிக்குழு கூட்டம்

image

ரோகி கல்யான் சமிதி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் – பட்டமேற்படிப்பு மையம் (RKS-IGGH&PGI)-ன் ஆறாவது ஆட்சிக்குழு கூட்டம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையில் இன்று (ஜீன் 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் G. ஸ்ரீராமுலு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 20, 2024

தமிழக அரசுக்கு புதுச்சேரி கவர்னர் வேண்டுகோள்

image

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தமிழக அரசு போலீசாரை முடுக்கிவிட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த கவர்னர் சில நேரங்களில் தமிழக போலீசார் சமூக சிந்தனையை மறந்து விடுகிறார்கள், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாக செயல்படுங்கள் எனவும் விமர்சனம் செய்தார்

News June 20, 2024

காரைக்காலில் நாளை சர்வதேச யோகா தினம்

image

புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நாளை (ஜூன் 21) காலை காரைக்கால் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

News June 20, 2024

தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை , அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். மத்திய அரசு 356வது பிரிவை பயன்படுத்தி, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறினார்.

News June 20, 2024

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

image

புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மின்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று கேட்டதற்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வந்தது நிறுத்தி வைக்கப்படுகிறது. உயர்ந்த மின் கட்டணத்தை மாற்றம் செய்ய ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் கேட்க முடிவு எடுத்துள்ளோம். ஆணையம், அளிக்கும் அனுமதி பொறுத்து திருத்தப்பட்ட மின்கட்டணம் அமலாகும் என்றார்.

News June 20, 2024

புதுவை மாநில தோ்தல் அதிகாரிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

image

புதுவை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருப்பவா் ஜவஹா். இவருக்கு, அந்த பொறுப்புடன் கூடுதலாக கல்வித் துறை, தொழில் மற்றும் வணிகம், உள்ளூா் நிா்வாகம் , வனத் துறை, சுற்றுச் சூழல், அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலராகவும், ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை மாநிலத் தலைமைச் செயலா் சரத்சௌஹான் நேற்று பிறப்பித்தாா் . இந்த தகவல் மத்திய தோ்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது

News June 20, 2024

ரெஸ்ட்ரோ பார்கள் இயங்கினால் உரிமம் சஸ்பெண்ட்

image

புதுச்சேரி அரசின் வருவாயை பெருக்குவதற்காக புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும் திரும்பும்போது விபத்து ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கினால் அதன் 3 மாத உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் என கலால் துறை நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

News June 20, 2024

புதுச்சேரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

image

இந்திய கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகா் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் கடல் பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இதில், கடல் பகுதிகளை மீன்பிடி படகில் சுற்றி வந்து, தொலைநோக்கு சாதனங்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கடலோரக் காவல்படையினா் செயல்பட்டனா்.

News June 19, 2024

புதுச்சேரி அருகே பள்ளியை பூட்டி போராட்டம்

image

மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட தேத்தாம் பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி பள்ளிக்கு போதிய மின் வசதி, கழிப்பிடம், தரமான குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வந்தது. இந்நிலையில, கல்வித்துறையின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பெற்றோர், மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பாமல் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!