India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் வாசல் முன்பு அங்கு தங்கி பிச்சை எடுத்து வந்த அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சென்ற வில்லியனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் இருந்தால் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில் 2026–27 கல்வியாண்டிற்கான 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என பள்ளி முதல்வர் கண்ணதாசன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனுமதி சீட்டுடன் நேரத்தில் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட அமைதி நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் பெண்மணி ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த ஒரு பவுன் தங்க நகையை கண்டெடுத்த அவர், சற்றும் யோசிக்காமல், அந்த நகையை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்த நேர்மையான செயலைப் பாராட்டும் விதமாக, காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவருக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

காரைக்காலில் இன்று (03.02.2026) சிங்காரவேலர் சாலை முதல் பை பாஸ் ரோடு வரை, மாஸ் நகர், டி.கே.நகர், ஆடிட்டர் சாகுல் ஹமீது நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.
Sorry, no posts matched your criteria.