Pondicherry

News July 3, 2024

தியாகி அன்சாரி துரைசாமிக்கு கவர்னர் பாராட்டு

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து புதுச்சேரியை பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பாடுபட்ட தியாகி அன்சாரி துரைசாமி என்றும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அவரது பணிகளை வரலாறு என்றும் நினைவு கூறும் என்று தெரிவித்துள்ளார்

News July 3, 2024

ராகுல் மன்னிப்பு கேட்க பாஜக தலைவர் வலியுறுத்தல்

image

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது இந்துக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் இந்துக்களை அவமதித்து பேசிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவருடைய கருத்தை புதுச்சேரி பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

கூட்டுறவு கல்லூரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மேலாண் இயக்குநர் மாறன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். பட்டப்படிப்புக்கு புதுவை மாநிலத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

சான்றிதழ்கள் சரிபார்ப்பு: ஜூலை 8ல் தொடக்கம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கௌரவப் பதவியான ஊர்க்காவல் படைப்பிரிவுக்கு தேர்வான ஆண்கள் மற்றும் பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் வரும் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில், அந்தந்த பிராந்திய காவல் துறை தலைமையிடத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

News July 2, 2024

ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

image

புதுச்சேரியில் ஊர்காவல் படையினருக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெறும்.  தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.

News July 2, 2024

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்; துணைநிலை ஆளுநர் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உ.பி. மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சத்சங் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

News July 2, 2024

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்; முதலமைச்சர் இரங்கல்

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; உ.பி. மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும் பலர் காயம் அடைந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 2, 2024

சம்பந்தன் மறைவு முதல்வர் இரங்கல்

image

இலங்கை அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை தமிழர்களின் எதிர்காலம் அமைதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையவும், சமஉரிமை கிடைத்திட இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு செய்தி மிகுந்த மனவருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு

image

புதுவை ஊர்காவல் படை வீரர்கள் தேர்வுகள் முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதில் காரைக்கால் சுந்தரேசன் 87.50 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், காரைக்கால் சூரியா, புதுவை ரமணா தலா 86.50 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், 86.25 மதிப்பெண்கள் பெற்று புதுவை கமலக்கண்ணன் 3வது இடத்தையும் பிடித்தனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் புதுவை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

News July 2, 2024

புதுவை துணை நிலை ஆளுநர் இரங்கல்

image

இலங்கை தமிழர்களின் அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவுக்கு, புதுவை துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்ட இரங்கல் செய்தியில் இலங்கைத் தமிழ்மகன் முதுபெரும் அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு உலகத் தமிழ் இனத்துக்கு பேரிழப்பு. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!