India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் நடந்து வருகிறது. பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் சுற்றுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் தற்போது AFT மைதானத்தில் இயங்குகிறது. இந்நிலையில் PRTC பயணச்சீட்டு முன்பதிவு மையம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஹை மாஸ் விளக்கு மற்றும் பயணிகள் நிழல் பந்தல் அருகே அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் வருகிற 8.07.2024 திங்கள் கிழமை முதல் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயண சீட்டு முன்பதிவு மைய்யம் மற்றும் BUS INDIA APP வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதுச்சேரி வானரப்பேட்டையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பளித்தார். அதில் போதுமான சாட்சியங்களோடு குற்றம் நிரூபிக்கப்படாததால் 31 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனரும், நாட்டின் முதல் தொழில் துறை அமைச்சருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் செல்வ கணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேட்டால் நடப்பாண்டும் இதுவரை மூன்றாம் ஆண்டு பி.காம், பிஏ, பி.எஸ்.சி உட்பட பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் விடைத்தாள் திருத்தும் பணிகள் கூட தொடங்காத நிலையில், எம்.காம், எம்ஏ, எம்எஸ்சி பாடப் பிரிவுகளின் சேர்க்கை நடைபெற்று வருவதால் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் புதுச்சேரி ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுவையில் என்ஆர் காங், பாஜக கூட்டணி ஆட்சி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரங்கசாமிக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக மாநில அமைப்பாளர் சிவா நேற்று கூறியதாவது: குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதை எங்கள் கட்சி தலைமை ஒருபோதும் விரும்பாது; ஏற்காது. நாங்களும் விரும்பவில்லை என்றார்.
வட அமெரிக்கா தமிழ் சங்கங்களின் 37வது மாநாடு 4ம் தேதி தொடங்கி இன்று வரை சான் அண்டோனியோ டெக்சாஸில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 2500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் புதுச்சேரி அரசு சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று கலந்து கொண்டார். அருகில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வகிரி அருணகிரி உள்ளார்.
புதுவை சென்டாக்கில் பிஆர்க் பொறியியல் படிப்பில் சேர கடந்த மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கான வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கட்டடவியல் திறனறி தேர்வு அல்லது ஜேஇஇ மார்க், +2 மதிப்பெண்ணுக்கு 50-க்கு 50 விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் இன்று தெரிவிக்கலாம் என சென்டாக் அறிவுறுத்தி உள்ளது.
மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், 24 மாநிலங்களுக்கு புதிதாக பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் இன்று நியமித்துள்ளது. அந்த வகையில் பாஜக பொதுச் செயலர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
புதுவையில் அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய திராவிடர் விடுதலை கழகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து
துணை ஆட்சியர் அலுவலகத்தை சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் இன்று 50 க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் முற்றுகையிட்டனர். மேலும் ஊழலை வெளிக்கொணர சமூக அமைப்புகளுக்கு வேறு என்ன வழி உள்ளது? ஊழல் இல்லாத ஒரு துறையை காட்டினால் காலில் விழந்து மன்னிப்பு கேட்க தயார் என்றார்.
Sorry, no posts matched your criteria.