Pondicherry

News July 22, 2024

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி

image

புதுச்சேரி மாநிலத்தில் ஊட்டச்சத்து குறித்த கணக்கெடுப்பை முதலமைச்சர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அரிசி கொள்முதல் செய்ய டெண்டர் வழங்கப்பட்டு விரைவில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என்றார்.

News July 22, 2024

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் காரைக்கால் நகராட்சி திருமண நிலையம், மாநாட்டு கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்து கட்டிடங்களையும் சீரமைக்கவும், பொதுப்பணித்துறை மூலம் இதற்கான திட்ட மதிப்பீட்டினை வரையறை செய்து நகராட்சியிடம் ஒப்படைத்து இதற்கு உண்டான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

News July 22, 2024

முன்னாள் சபாநாயகருக்கு முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது இல்லத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போற்றி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News July 22, 2024

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுவை முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதலமைச்சரின் பெயரைச் சொல்லி கையூட்டு பெற்று வருகிறார்கள். மேலும் லஞ்சம் பெறுபவர்கள் யார் என்று தெரிந்தும் முதலமைச்சரும், ஆளுநரும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ரங்கசாமி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்றார்.

News July 22, 2024

தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு

image

புதுச்சேரி மாநிலத்தில், விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது பயிற்சியாளர்களில், 28 பேரை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையர், 100க்கும் மேற்பட்டோர் நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பயிற்சியாளர்களுக்கு பணி நிரந்தரம் தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.

News July 22, 2024

புதுவை துறைமுகத்தில் தூர்வாரும் பணி

image

புதுவையில் ஐ.ஐ.டி. கடல் பொறியியல் பிரிவு பேராசிரியர் முரளி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், கடந்த 1 வாரமாக துறைமுகம் பகுதியில் படகு நிறுத்த தளம் துவங்கி, முகத்துவாரம் வரை எந்தெந்த பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது என்பதை ஆழம் கண்டறியும் கருவி, எக்கோ சவுண்ட், ஜியோ மேக்ஸ் சிக்னல்கள் கருவி உதவியுடன் சர்வே செய்தனர். மேலும் 6 மீட்டருக்கு குறைவாக ஆழம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தூர்வாரப்பட்டது.

News July 22, 2024

மருத்துவ படிப்புக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2024 – 25ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு குழுவால் வெளியிடப்படும் வழிகாட்டுதல்கள் மற்றும் அட்டவணைப்படி, இளநிலை நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

News July 21, 2024

ஜிப்மரில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மருத்துவமனையில் குரூப் பி பிரிவில் 169 இடங்களும், குரூப் சி பிரிவில் 40 என 209 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜிப்மர் இணையதளத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி மாலை 4:30 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.

News July 21, 2024

புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு

image

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், டெல்லியில் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி கமிஷன் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ள வேண்டும். மேலும் பல மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அதிகாரிகள் தொலைபேசியில் பேசி லஞ்சம் பெற்று கொண்டு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

News July 21, 2024

டெல்லி செல்லும் எம்எல்ஏக்கள்: புதுவையில் பரபரப்பு

image

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் நாளை மாலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது புகார் தெரிவிப்பதோடு புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!