Pondicherry

News February 9, 2026

புதுச்சேரி: 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள்

image

தேர்தல் நேரம் நெருங்குவதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரி நகரில் மட்டும் 15 இடங்களில் இந்தச் சாவடிகள் உடனடியாக அமைக்கப்பட உள்ளன. காரைக்காலில் 10, ஏனாமில் 10 மற்றும் மாஹேவில் 6 என மாநிலம் முழுவதும் தேர்தல் துறை இதற்கான டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

News February 9, 2026

புதுவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

புதுச்சேரி: அடித்து கொலை – குற்றவாளி கைது

image

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார் (40). தச்சுத்தொழிலாளியான இவர் புதுச்சேரி ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த வாரம் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹரி-யை (33) நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 8, 2026

புதுச்சேரி: டிகிரி போதும் – வங்கி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

புதுச்சேரி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் <<>>சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

புதுச்சேரி: இனி அலைச்சல் இல்லை!

image

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. திருச்சி மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://tiruchirappalli.nic.in/ta/
6. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 8, 2026

புதுச்சேரி: இளைஞர் மீது பாந்த குண்டாஸ்

image

புதுச்சேரி உருவையாரைச் சேர்ந்தவர் பட்ட முருகன்(23). இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இவரை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் முருகனை மீண்டும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

News February 8, 2026

புதுச்சேரி: வங்கியில் ரூ.1 லட்சம் மோசடி – ஒருவர் கைது

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(72). இவரின் வங்கிப்புத்தகத்தை திருடிய ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். இது சிசிடிவி மூலம் உறுதியான பின், மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஜெயராமனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!