India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி தொழில்நுட்பத் துறை இயக்குனர் சிவராஜ் மீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலம் வழங்கப்படும் ரேஷன் கார்டு சேவைகளை நெறிப்படுத்த பொது சேவை மையங்களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டில் பெயர்களை சேர்க்க ரூ.60 வசூலிக்கப்படும் என்றும், பெயர் நீக்கம் மற்றும் சரண்டர் செய்ய ரூ.30 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தனியார் பள்ளியில் இருந்து 28 மாணவ, மாணவியர் சிங்கப்பூரில் நடந்த, ரோபோரோர்ஸ் சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. முதன்மைப் பிரிவில் 4-ஆவது பரிசையும், இரண்டாம் நிலைப் பிரிவில் 3-ஆவது பரிசையும் பெற்றனர். அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் கடைகளை திறக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். எனவே உடனே ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசியை வழங்க வேண்டும். இதேபோல் மத்திய அரசு வழங்கும் அரிசிக்கான பணத்திற்கு பதில், அரிசியாக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்தவர் அனுஷ்யா. கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். பளு தூக்கும் வீராங்கணையான இவர், தென் ஆப்ரிக்கா நாட்டின் சன் சிட்டியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் 2020ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து 390 காவலர் பணிகளுக்கான தேர்வை நடத்தக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு காலம் விசாரணை நடைபெற்று இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சீட் ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து நாளை மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அனைத்து அசல் ஆவணங்களுடன் சேர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே அமைந்துள்ளது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் ஐந்து பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.
காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்காததை உறுதி செய்யும் வகையில் அனைத்து செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிக்னல் சோதனை சிறைச்சாலையில் இன்று நடைபெற்றது.
சிறையில் ஜாமர் கருவி இருந்தும் எப்படி சிக்னல் கிடைக்கிறது? அலைவரிசையை அதிகப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சிறைத்துறை எச்சரிக்கை.
புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து 2ஆம் தேதி காலை 10:15 மணிக்கு ரூ. 12700 கோடிக்கு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் புதுவைக்கு எந்தவொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தும் புதுவை மாநிலத்திற்கான மாநில வளர்ச்சி சம்பந்தமான எந்த கோரிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்த முன்வரவில்லை. திட்டக்குழு கூட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிக்க வேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.