Pondicherry

News February 12, 2026

புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

image

புதுவை சட்டசபை இன்று கூடியது. சட்டசபை சபாநாயகர் செல்வம் சபை நிகழ்வுகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் செல்வம் வாசித்தார். முன்னாள் எம்.எல்.ஏ சுப்பராயன், முன்னாள் நீதிபதி தாவுத் அன்சாரி, மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News February 12, 2026

புதுச்சேரி: அரசு பணியாளர் தலைவர் சிறையில் அடைப்பு

image

புதுச்சேரியில் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை முற்றுகையிட முயன்ற அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் மீது, உருளையன்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சரவணன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 12, 2026

புதுச்சேரி: டிகிரி போதும் – வேலை ரெடி

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

புதுவை: அரசு பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

image

புதுவை, தேர்வு ஆணையம் அரசு பணிகளுக்கு தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூனியர் நூலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31-ம் தேதி காலையும், 2-ம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7-ம் தேதி காலை நடக்க உள்ளது.

News February 12, 2026

புதுச்சேரி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

புதுச்சேரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக் செய்து<<>> மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

புதுவையில் 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் அபேஸ்

image

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர், அந்த லிங்கை ஓபன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 மாயமானது. இதேபோல் கோரிமேடில் ரூ.40,800, வைத்திக்குப்பத்தில் ரூ.15,399 என 3 பேர் ரூ.1,46,199 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

image

காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக புதுச்சேரி துணை ஆட்சியராக இருந்த இஷிதா ரதியை நியமித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக இஷிதா ரதி பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக பதவி ஏற்று கொண்ட ஆட்சியரை பல்வேறு அரசு துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News February 12, 2026

புதுச்சேரி: 2026-27 நிதியாண்டில் ரூ.5,396 கோடி பட்ஜெட்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். இதில் நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் அவர், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News February 12, 2026

புதுவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

புதுவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!