Pondicherry

News September 13, 2024

புதுவை முதலமைச்சரின் இரங்கல் செய்தி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2024

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

image

புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின் படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செப்.15ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் வரும் செப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 13, 2024

புதுச்சேரியில் மது கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் வருகின்ற செப்டம்பர்.17ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாது நபியை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முன்னிட்டு, புதுச்சேரியில் அனைத்து விதமான மதுக்கடைகளையும், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

News September 13, 2024

புதுச்சேரி நீதிமன்றங்களில் நாளை லோக் அதாலத்

image

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளில் நாளை லோக் அதாலத் நடக்க உள்ளதாக, மாவட்ட நீதிபதி அம்பிகா நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் பொழுது புதுச்சேரி கோர்ட், காரைக்கால் மாவட்ட கோர்ட் மற்றும் ஏனாம் கோர்ட் வளாகத்தில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள மற்றும் நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.

News September 12, 2024

உண்ணாவிரத போராட்டம் அதிமுக அறிவிப்பு

image

புதுச்சேரி N.R. காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசைக் கண்டித்து மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் செப் 16ஆம் தேதி காலை 9மணி முதல் மாலை 5 மணிவரை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 16/09/2024 திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்றும் இந்த குறைதீர்க்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

புதுவையில் 8 அரசு பள்ளிகளுக்கு தலைவர்கள் பெயர்

image

புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் முடிவுகள் எடுக்கப்பட்டது. அதாவது எட்டு அரசு பள்ளிகளுக்கு மறைந்த தலைவர்களின் பெயரை சூட்ட அமைச்சரவை பரிந்துரைத்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

News September 12, 2024

புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனரின் நெகிழ்ச்சி செயல்

image

புதுச்சேரிக்கு மாநிலத்திற்கு சுற்றுலா வந்த நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி இன்று ஆட்டோவில் சென்ற போது விலையுயர்ந்த ஆப்பிள் செல்போனை தவறவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் புறப்பட்டுச் சென்ற பேருந்தை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்தார்கள். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 12, 2024

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: கவர்னர் பங்கேற்பு

image

அன்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை அடுத்து விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News September 12, 2024

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேட்டி

image

புதுச்சேரி பாரதி மில்லில் ஆய்வு செய்த பின்பு நேற்று செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பஞ்சாலைகள் புதுச்சேரிக்கு எவ்வாறு உபயோகமாக இருக்கும். சில தொழிற்சாலைகளிலேயே மாற்றிக்கொள்ளலாமா என ஆராய்ந்து வருகிறோம். இங்குள்ள நகர வனத்தை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம். கிரீன் லங்ஸ் பார்த் சிட்டி’ திட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

error: Content is protected !!