India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<

சர்வதேச அளவில் 28 நாடுகள் பங்கேற்ற பாரா பேட் மிட்டன் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற புதுவை பல்கலைக்கழக மாணவர் வெங்கடசுப்பிரமணியன் வெண்கல பதக்கம் வென்றார். அவர் புதுவை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில செயலாளர் ஆதவன், பயிற்சியாளர் கணபதி, மாணவரின் தாயார் ஜெயப்பிரதா ஆகியோர் உள்ளனர்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர்சா திக், இவர் தனது ஸ்கூட்டரில் திருநள்ளாறு வழியாக நேற்று சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு புதிய ரயில்நிலையம் அருகே சென்றபோது, திடீரென ஸ்கூட்டரில் தீப்பொறி ஏற்பட்டது. உடனே அவர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பார்த்துள்ளார். அப்போது திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்து கருகியது. இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருகின்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, புதுச்சேரி காவல்துறையில் 17 ஆய்வாளர்கள் மற்றும் 29 உதவி ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கோட்டுச்சேரி மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையங்களைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், அந்தோணி, ராஜகணபதி மற்றும் மோகன் ஆகியோரும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று (21.02.2026) காரைக்கால் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்திலும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள்/புகார்களை மனுவாக நேரில் அளித்து தீர்வு காணும்படி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் வரும் 22-ந்தேதி காவல்துறையில் எஸ்.ஐ பணிக்கு 4 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. முதல் தாள் காலை 10 முதல் 12 மணி வரையிலும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 1,312 பேர் தேர்வு எழுதுகின்றனர். அடையாள அட்டை அசல் எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்தபின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

புதுவையில் வரும் 22-ந்தேதி காவல்துறையில் எஸ்.ஐ பணிக்கு 4 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. முதல் தாள் காலை 10 முதல் 12 மணி வரையிலும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 1,312 பேர் தேர்வு எழுதுகின்றனர். அடையாள அட்டை அசல் எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்தபின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

மணவெளி சட்டமன்றத் தொகுதி புதுக்குப்பம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை, முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி கட்டிடம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு புதிய மதில் சுவர் மற்றும் பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.