India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு துணை முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சென்னையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தங்க நகைகளை பொதுமக்களிடமிருந்து பரித்த சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், அவனது கூட்டாளி மற்றும் முக்கிய குற்றவாளியான சையது பாஷா தப்பியோடிய நிலையில் தற்போது அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பாஜக-வின் முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆய்வுக்கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி தலைமை தாங்கினார். மாநில பாஜக தலைவரும் புதுச்சேரி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாருமான புரந்தேஸ்வரி எம்.பி பேசுகையில் பேசுகையில், 2 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறுப்பாளர்கள் அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் என்றார்.
புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் ஆண்டுதோறும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 20ஆவது முறையாக வரும் அக்டோபர் 13ஆம் தேதி மாலை 5:40 மணிக்கு விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் புதுவை பயணிகள் ரயிலில் ஓடும் ரயிலில் ஓவிய போட்டி நடக்கிறது. இத்தகவலை புதுவை திருவள்ளுவர் கலைக்கூட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் அருகே வெள்ளவாரி வாய்க்காலில், நேற்று ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த, லாஸ்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் இறந்தவர், சோலை நகரை சேர்ந்த வேலு, எனவும், இவர் அடிக்கடி, மது குடித்து வந்ததும் தெரிய வந்தது.
காரைக்காலில் பிரபலமான கோவில்களில் காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ஒன்று ஆகும். இதில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவதற்கு வசதியாக இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் க்யூ ஆர் கோர்டு-ஐ ஸ்கேன் செய்து காணிக்கை செலுத்தும் வசதியை கோவில் நிர்வாக அதிகாரிகள் அருணகிரிநாதன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு க்யூ ஆர் கோர்டு-ஐ துவங்கி வைத்தார்கள்.
புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நாளை காலை 8 மணிக்கு காந்தி சிலை கடற்கரை அருகில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், விலங்கு நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இலவச மின்சார திட்டத்தில், 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது என கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சேர்ந்த திருமணமான பெண்ணிடம் சகோதரி என்று பேசி பின்னர் நட்பாக பேசி பழகி நம்பிக்கை ஏற்படுத்தி நிர்வாண வீடியோ காலில் வரச்சொல்லி அதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் அனுப்பி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு வேலூரைச் சேர்ந்த நபரை போலிசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா பழைய துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, தீபாவளிக்கு முன்பு ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும் டெங்கு மலேரியாவை கட்டுப்படுத்த போதுமான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.