Pondicherry

News October 7, 2024

புதுவை: விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தால் பார்ப்போம் – முதல்வர்

image

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் முதல்வர் ரங்கசாமி தவெக கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் பார்ப்போம் என்று தெரிவித்தார்.

News October 6, 2024

ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசி

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீபாவளிக்கு முன்னதாக அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக 10 கிலோ அரிசியில் இரண்டு கிலோ சர்க்கரை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல் நமது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

பட்டியலின பெண்களுக்கு சான்றிதழ் வழங்க எதிர்ப்பு

image

புதுச்சேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெண்களுக்கு பூர்வீக அட்டவணைப்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உத்தரவை எதிர்த்து சான்றிதழ் வழங்கக் கூடாது என்று துணை சபாநாயகர் ஆகிய ராஜவேல் தலைமையில் பாகூர் ராமலிங்கம் முன்னிலையில் அமைச்சர் சாய் சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர்.

News October 6, 2024

ஆசிரியரின் சைக்கிளை திருட்டுத்தனமாக ஓட்டினேன்: முதல்வர்

image

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அலையன்ஸ் பிரான்சிஸ் நேற்று கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, அன்றைய காலத்தில் ஆசிரியர் சைக்கிளை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று குரங்கு பெடல் போட்டு ஓட்டி செல்வார்கள். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆசிரியர் சைக்கிளை துடைப்பதாக கூறி அந்த சைக்கிளை ஓட்டி சென்றுள்ளேன் என்று கூறினார்.

News October 6, 2024

புதுச்சேரி ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் பெண்கள்-85, ஆண்கள்-9 என 94 இடங்களும், பிஎஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் 87 இடங்களும் என மொத்தமாக 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. 2024-25ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் இணையதளத்தில் நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஷேர் செய்யவும்

News October 5, 2024

புதுச்சேரியில் கரும்பு ஊக்கத்தொகை பெற அழைப்பு

image

புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நெல், மணிலா, பயறு, சிறுதானியம், பருத்தி, எள் ஆகியவற்றுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. கரும்பு பயிர் சாகுபடி செய்யும் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம். அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

146 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

image

புதுச்சேரி பெத்திசெட்டிபேட்டையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மூட்டைகளில் இருந்த 146 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் மற்றும் முகேஷ் குமார் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 5, 2024

புதுவையில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்கம்

image

புதுவையில் வரும் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஹைதராபாத், பெங்களூருவுக்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏர்ஷபா நிறுவனம் சார்பில் கொச்சி, தூத்துக்குடி, திருப்பதி, சேலம், கோவை, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளுக்கும் சிறிய ரக விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

News October 5, 2024

புதுச்சேரியில் வங்கிகளின் பெயரை கூறி ரூ1.82 கோடி மோசடி

image

புதுச்சேரி இணைய வழி குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை: குறிப்பிட்ட வங்கியில் மேலாளர் பேசுகிறேன் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், ஜாமீன் தேவையில்லை வங்கி பரிவர்த்தனை போதும் என்பது போல காப்பீடு பதிவு செயல்முறை கட்டணம் ப்ராசசிங் என அவர்களின் அவசரத்தை புரிந்து கொண்டு 2000 முதல் பல லட்சம் வரை மோசடி செய்வர். எனவே இது குறித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 5, 2024

புதுச்சேரியில் ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு

image

புதுச்சேரியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது இப்பணி நிலை தொடர்பாக நீதிபதி சசிதரனிடம் நேற்று கேட்டதற்கு ஓபிசி கணக்கெடுப்புப் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95 % நிறைவடைந்துள்ளது.

error: Content is protected !!