Pondicherry

News March 3, 2026

காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

image

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.

News March 2, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியும் தேர்தலை புறக்கணிக்கும்

image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிப்பதாக வெளிப்படையாக கூறினால், காங்கிரஸ் கட்சியின் தேர்தலை புறக்கணிக்கும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

News March 2, 2026

புதுச்சேரி: காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில், இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொண்ட காவல்துறையினருக்கு, பாராட்டு சான்றிதழை உள்துறை அமைச்சர் வழங்கினார்.

News March 2, 2026

புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது

image

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு விடுமுறை தினமான (04.03.2026) புதன்கிழமை அன்று “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

News March 2, 2026

புதுச்சேரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே <<>>க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரி: பிரதமரை சந்தித்து மாநில செயலாளர் மனு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், புதுச்சேரி பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குதல், 1963 யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் செய்து கூடுதல் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் அளித்தல், நிலுவையில் உள்ள கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவை வலியுறுத்தினார்.

error: Content is protected !!