India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பள்ளிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர நிதியுதவித் தொகை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கான தொகையை சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையில், செயலாளர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசின் விருதாளர் ஆதவன் ஆகியோர் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை நேரில் சந்தித்தனர். பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இலவச மனைப்பட்டா மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கக் கோரி இந்த சந்திப்பின் போது அவர்கள் மனு அளித்தனர்.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாதகவுக்கு வழக்கம்போல் விவசாயி சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் தங்களது பாரம்பரிய சின்னங்களுடன் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை மங்கலம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் உறுவையாறு திருக்காஞ்சி மெயின் ரோடு ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உறுவையாறு புதுநகரை சேர்ந்த முகிலன் (20), கரிக்கலாம்பாக்கம் தமிழரசு (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.