Pondicherry

News March 7, 2026

புதுச்சேரி: ஜிப்மரில் புதிய நோயாளிகள் தங்குமிடம் திறப்பு

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்காக, ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய தங்குமிடம் (Patient Shelter) திறந்து வைக்கப்பட்டது. ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நெகி, கோத்தி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சஞ்சய் கோத்தி மற்றும் சுமித்ரா கோத்தி ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.

News March 7, 2026

புதுவை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

புதுவை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

புதுவை: கூடுதல் தொகுதிகள் கோரும் திமுக!

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 06) எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதையும், கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News March 7, 2026

புதுச்சேரி: மென்பொருள் பொறியாளர் தற்கொலை

image

கோட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்த மாத்திரைகளை மிக்ஸியில் அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

புதுச்சேரி: 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கு இடையில் மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

News March 7, 2026

காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

image

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 6, 2026

புதுச்சேரியில் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கிடையில், மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

News March 6, 2026

புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

image

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

News March 6, 2026

புதுச்சேரி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 6, 2026

புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!