Pondicherry

News March 6, 2026

புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<> pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News March 6, 2026

புதுச்சேரி மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

புதுச்சேரி மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 6, 2026

புதுச்சேரி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க!

News March 6, 2026

பான்கோஸ் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் விழா

image

புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பான்கோஸ் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் மற்றும் பான்கோஸ் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.13.76 கோடி மதிப்பிலான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பதிவாளர் முத்துமீனா கலந்து கொண்டனர்.

News March 6, 2026

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வங்கிச் சேவைகளில் சலுகை

image

புதுச்சேரி அரசு ஊழியர்களின் நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் வகையில், நான்கு பொதுத்துறை வங்கிகளுடன் (இந்தியன் வங்கி, ஐஓபி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி) புதுச்சேரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சம்பளக் கணக்கு வைத்துள்ள சுமார் 23,000 அரசு ஊழியர்கள் மேம்பட்ட வங்கிச் சேவைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

புதுவை: காங்கிரஸ் சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!

image

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு பார்வையாளர்களாக இரு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் அறிவிப்பின் பேரில் தினேஷ் குண்டு ராவ் மற்றும் பொன்னம் பிரபாகர் ஆகியோர் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார்.

News March 6, 2026

புதுச்சேரி: தாலி செயின் பறிப்பு-2 பெண்கள் கைது!

image

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில், விழுப்புரம் முத்தம்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரிடம் இருந்து, 6.770 சவரன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த நித்யா, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த அபிநயா ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 6, 2026

புதுச்சேரி: போக்சோ விரைவு நீதிமன்றம் அதிரடி!

image

புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சீனுவாசன் (55) என்பவருக்கு போக்சோ விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 6, 2026

புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

திருநள்ளாறில் இன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம், திருநள்ளாறு, நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் என்றும் மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

News March 5, 2026

புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

image

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.

error: Content is protected !!