Pondicherry

News April 22, 2024

புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

image

புதுவை வில்லியனுார் ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் கால பூஜை, யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10:05க்கு புட்டலாய் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 21, 2024

காரைக்காலில் பாஐக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

காரைக்கால் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 21, 2024

புதுச்சேரி முதல்வர் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து

image

நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “அனைத்து உயிரினங்களும் அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை போதித்த பகவான் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எந்து அன்பான இனிய மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்” என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

புதுச்சேரி: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

image

நாளை (ஏப்.21 ) மகாவீர் ஜெயந்தி தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வருடா வருடம் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நாளை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News April 20, 2024

புதுவையில் 3 அடுக்கு பாதுகாப்பு

image

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமுக்கு முன்பாக துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஸ்ட்ராங் ரூம் மற்றும் 3 அடுக்கு பாதுகாப்பை ஆய்வு செய்தார். இதனையடுத்து, கட்சி முகவர்களுடன் அவர் கூட்டம் நடத்தினார்.

News April 20, 2024

புதுச்சேரி: வாக்குப்பதிவு நிலவரம்

image

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வாக்குகளை செலுத்தினர். இதில் புதுச்சேரி முழுவதும் 78.80% வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக பாகூர் தொகுதியில் 88.76% வாக்குகளும், குறைந்தபட்சமாக மாகி தொகுதியில் 65.11% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 20, 2024

சிங்கப்பூரில் இருந்து புதுவை வந்து வாக்களிப்பு

image

கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிங்கப்பூரில் மனைவி மாலதி, மகள் புவியரசி (18) மற்றும் மகன்களுடன் வசித்து வருகின்றார். இந்திய குடியுரிமை பெற்ற இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை உள்ளது. அதன்படி புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர். இவர்களில் புவியரசி முதல் முறை வாக்காளர் ஆவார்.

News April 19, 2024

திமுக எம்.எல்.ஏ.க்கள் விதி மீறல்கள்; அதிமுக செயலாளர் குற்றச்சாட்டு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ஆளுங்கட்சியை சார்ந்த மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மீறப்படுகிறது. இது சம்பந்தமான அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக கூறினார்.

News April 19, 2024

3 மணி நேர நிலவரப்படி 57.43% வாக்குப்பதிவு

image

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்றத் வாக்குப்பதிவு 3 மணி நிலவரப்படி காரைக்கால் வடக்கு தொகுதி 55.75 %, காரைக்கால் தெற்கு தொகுதி 54.39 %, திருநள்ளாறு தொகுதி 57.60 %, நிரவி திருப்பட்டினம் தொகுதி 57.06 %, நெடுங்காடு தொகுதி 62.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆக மொத்தம் காரைக்கால் மாவட்டத்தில் 3 மணி நேர நிலவரப்படி 57.43 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

புதுவை முதல்வர் ரங்கசாமி வாக்களிப்பு

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி லாசுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார். இந்த நிலையில் முதல்வர் இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.