India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு ராம நவமி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 1 ஆம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் சினிமா ஆடை வடிவமைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புதுச்சேரி படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மர்மமான முறையில் இருந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி பால் கூட ஊர்வலத்தில் அதே பகுதியைச் சார்ந்த உத்ரேஸ்(28) என்ற வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரின் வீட்டில் இன்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் ஆசி பெற்றார்.
புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.
புதுவையில் தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படைகள், சோதனைச்சாவடி கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், மதுபான கடை விற்பனை நேரம் குறைப்பு ரத்து செய்யப்படவில்லை. இதனால் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை பழையபடி அறிவிக்கவும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெறவும் தேர்தல் துறைக்கு கலால் துறை கோப்பு அனுப்பி உள்ளது.
புதுவை லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என். சி. சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் 225 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில அரசின் கணக்கு மற்றும் கருவூலத்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2024ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் வரும் மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் வழங்க இயலாது கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்காலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் வெற்றி பெற்றவுடன் புதுச்சேரி மாநிலத்தில் மூடி உள்ள ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து மாநில மக்களுக்கு இலவச அரிசிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.