Pondicherry

News May 8, 2024

உலக செஞ்சிலுவை தினம் – புதுவை ஆளுநர் வாழ்த்து

image

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுல சேவையே உலக ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

என்.ஆர் கூட்டணி ஆட்சி மக்களை ஏமாற்றியது

image

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் வாக்களித்த மக்கள் இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதற்காக வருகிறார்கள் என்று ஆராய உடனடியாக இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

News May 8, 2024

இனி நீங்களும் ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 8, 2024

புதுவையில் பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா

image

புதுவை பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று (ஏப்ரல்.8)முதல் (ஏப்ரல்.10) வரை 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த முகாம், மேட்டுப் பாளையம், முதலியார்பேட்டை, கரிய மாணிக்கம், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் அரும்பார்த்தபுரம், சாரம் வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல். சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

ஹாக்கி வீரர்களுக்கு எம்.எல்.ஏ பாராட்டு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற புதுவை குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பாராட்டினார். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்

News May 7, 2024

புதுச்சேரியில் சென்டாக் சேர்க்கைக்கு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு, தனியார் கல்லூரிகளில் நீட் அல்லாத பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு அரசின் சென்டாக் அமைப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் சென்டாக் இணையதளமான (www.centacpuducherry.in) ல் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். கடைசி நாள் வருகிற 22 ந்தேதி என அறிவித்தது.

News May 7, 2024

புதுச்சேரி: +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை

image

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆதேஷ். விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் பனித்திட்டு சுனாமி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். +2 தேர்வில் ஆதேஷ் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

News May 7, 2024

புதுச்சேரி முதல்வருக்கு சபாநாயகர் வாழ்த்து

image

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்று 4 ஆம் ஆண்டு துவக்க நாளில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News May 7, 2024

பாண்டிச்சேரி பாறை கடற்கரை சிறப்புகள்!

image

பாண்டிச்சேரியிலுள்ள அழகிய ராக் பீச் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இந்த கடற்கரையில் நடைபயிற்சி செய்யவும் கடலின் அழகை ரசிக்கவும் சிறந்த இடமாகும். மற்ற கடற்கரை போன்று மணல் கரைகள் இருக்காது. இதில் கரை முழுவதும் பாறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தூய்மையான கடற்கரையில் இதுவும் ஒன்றாகும். இங்கு, 1.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம் கடலினுள் செல்லும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

புதுவையில் நாளை குடிநீர் சப்ளை ரத்து

image

ஒட்டம்பாளையத்தில் உள்ள கொம்பாக்கம் நீர்த்தேக்க தொட்டி கழுவும் பணிகள் நாளை நடக்கிறது.எனவே நாளை (ஏப்ரல்.8) மதியம் 12-2 கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், அதேபோல் முதலியார்பேட்டை, தேங்காய்த்திட்டு நீர்த்தேக்க தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஏப்ரல்.9)மதியம் 12 – 2 வரை தேங்காய்த்திட்டு அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் தடைபடும்.