India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி முதல்வர் தனது குடியிருப்பு அருகில் அமைத்துள்ள அப்பா பைத்தியசாமி சித்தர் ஆலயத்தில், இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கலந்துகொண்டு, இறைவனை தரிசித்து பின்பு அங்கிருக்கும் அன்னதான கூடத்தில் முதல்வரும், ஆளுநரும் ஒன்றாக உணவு அருந்தினர்.

காரைக்கால் – பேரளம் ரயில் தடத்தில் புதிய ரயில் சேவைகளை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், வரும் மே 20, 2026 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, 16175/16176 தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி பேரளம் – காரைக்கால் வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில் சேவை வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.

புதுச்சேரி சிறைத்துறையின் ஐ.ஜி.யாகவும் மற்றும் துறைமுகத்துறையின் இயக்குனராகவும் மோகன்குமார் பதவி வகித்து வருகின்றார். மேலும் அவருக்கு கூடுதல் பொறுப்பு பதவியாக, புதுச்சேரி கூட்டுறவு துறையின் பதிவாளராகவும், பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் நேற்று பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 <

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேஜ கூட்டணியில் போன முறை என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளும், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அதே போல் ஒதுக்க பேசப்பட்டுள்ளது. மேலும் லஜக எங்கள் கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி அரசின் நிறுவனத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட State Institution for Transformation தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அரசு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், வளர்ச்சித் திட்டங்களை திறம்பட கண்காணித்தல் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறை மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி தொடரும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, பேச்சுவார்த்தை சுமூகமாகவும் திருப்திகரமாகவும் நடைபெற்றதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.