Pondicherry

News March 15, 2026

புதுச்சேரி: 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி

image

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) வேட்பாளர்களின் கலர் புகைப்படமும் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 15, 2026

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அட்டவணை

image

புதுச்சேரி 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23 ஆகும். மேலும், வேட்பு மனு பரிசீலனை மார்ச் 24ம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

News March 15, 2026

BREAKING: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதனை தொடர்ந்து, மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

புதுவை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<>இங்கே <<>>கிளிக்’ செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News March 15, 2026

ஏனாம் சென்ற முதல்வர் ரங்கசாமிக்கு வரவேற்பு

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏனாம் சென்றுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு, ஏனாம் முக்கிய பிராந்திய நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்றனர். முதல்வர் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்க உள்ளார்.

News March 15, 2026

புதுச்சேரி: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News March 15, 2026

புதுச்சேரி: 388 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

image

புதுச்சேரி தேர்வு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவையில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள எல்டிசி, யுடிசி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 388 பணியிடங்களை நிரப்புவதற்கு புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் வருகிற 23ம்தேதி, காலை 10 மணி முதல் ஏப்.14ம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 15, 2026

புதுச்சேரி: அதிர வைத்த பேருந்து விபத்து

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே, மரக்காணம் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2026

புதுச்சேரி: அதிர வைத்த பேருந்து விபத்து

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே, மரக்காணம் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2026

புதுவை ஜிப்மரில் ரத்தமாற்று குறித்து கல்வி நிகழ்ச்சி

image

புதுவை ஜிப்மர் இரத்த மாற்று நடைமுறைகள் என்ற தலைப்பில் மருத்துவ கல்வி நிகழ்ச்சி நடத்தியது. இதன் ஒரு பகுதியாக நடைமுறை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. காய சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை துறைகளில் இரத்த
மாற்று முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இதில் இரத்த மாற்று, அவசர சிகிச்சை, மயக்க மருத்துவம் ஆகிய நிபுணர்கள், உட்பட 150 பேர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் 2000 பேர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!