Pondicherry

News March 15, 2026

புதுச்சேரி: பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய வாலிபர்

image

புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்த ஷர்மிளா என்ற இளம் பெண், தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த ஜோசப், நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஷர்மிளா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஷர்மிளா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 14, 2026

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

image

புதுச்சேரி இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 14) எஸ்வி பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 14, 2026

புதுவை தலைமைச் செயலர் சாமி தரிசனம்

image

திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் திருக்கோயிலில், புதுச்சேரி தலைமைச் செயலர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக தருமை ஆதீனம் ஶ்ரீ ல ஶ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், ராஜா சுவாமிநாத குருக்கள் உடன் உள்ளனர்.

News March 14, 2026

புதுச்சேரி: தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி தொடக்கம்

image

புதுச்சேரி, வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. அதனை முன்னிட்டு இன்று முதல் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், வாக்குச்சாவடி தலைமை அதிகாரி மற்றும் மற்ற தேர்தல் அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த முதல் பயிற்சி வகுப்பில், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்தும், மாதிரி தேர்தல் நடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

News March 14, 2026

புதுச்சேரி: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

புதுச்சேரி: ஆளுநர், முதல்வர் சாமி தரிசனம்

image

புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பக்தர்களுடன் வழிபாடு செய்தனர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 14, 2026

புதுச்சேரி: 27,514 மீனவர்களுக்கு ரூ.12.38 கோடி நிதி

image

புதுச்சேரி மீன்வளத்துறையின் கீழ் மத்திய அரசின் “பிரதான் மந்திரி மட்சிய சம்பட யோஜனா” வின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல்” என்ற திட்டத்தின்கீழ், சுமார் 27,514 மீனவர் பயனாளிகளுக்கு, தலா ரூ.4,500 வீதம் மொத்தம் ரூ.12,38,13,000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில், முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தட்டான்சாவடி பகுதியில் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!