India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி, காரைக்காலில் உயர்மின் அழுத்த அழுத்த பாதையில் சில அவசியப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று (13.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நாகூர் மெயின் ரோடு (முல்லையாறு முதல் அரசலாறு வரை) அம்மாள் சத்திரம், நேதாஜிநகர், சுப்பையா பிள்ளை நகர், கீழ ஓடுதுறை, நடு ஓடுதுறை, தோமாஸ் அருள் திடல் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என காரைக்கால் உதவிபொறியார் நகரம் -1 அறிவிக்கிறார்.

புதுச்சேரி, காரைக்காலில் உயர்மின் அழுத்த அழுத்த பாதையில் சில அவசியப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று (13.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நாகூர் மெயின் ரோடு (முல்லையாறு முதல் அரசலாறு வரை) அம்மாள் சத்திரம், நேதாஜிநகர், சுப்பையா பிள்ளை நகர், கீழ ஓடுதுறை, நடு ஓடுதுறை, தோமாஸ் அருள் திடல் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என காரைக்கால் உதவிபொறியார் நகரம் -1 அறிவிக்கிறார்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிற்கு கட்டணமில்லா எண்கள் மற்றும் இணையதள வசதிகளை அறிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலம்: 1800224344, மிஸ்டு கால் மூலம்: 7710955555, IVRS மூலம்: 7715012345, இணையதளம் மூலம்: my.ebharatgas.com முன்பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் சிலிண்டர்கள் தொடர்பான புகார்களுக்கு 04368-222718 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், வீட்டு உபயோக எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இதை கண்காணிக்க காவல்துறையினரும் குடிமைப் பொருள் வழங்கல் துறையினரும் இணைந்து உடனடி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.

லாஸ்பேட்டை போலீசார் ஏர்போர்ட் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர் 630 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேலும் விசாரித்ததில் அவர் பெயர் சந்தோஷ் என்பதும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 630 கிராம் கஞ்சா இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி ஆளுநர் தற்காலிகமாக தங்கியிருக்கும் மாளிகைக்குள், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை பணிநீக்கம் செய்யவும், அவருடன் பணியில் இருந்த 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும் டி.ஜி.பி ஷாலினி சிங்குக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.

புதுச்சேரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோக நிலைமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), கூடுதல் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அதிகாரிகள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜார்கண்டைச் சேர்ந்த இளைஞர், புதிய ஆளுநர் மாளிகையில் நுழைந்து விருந்தினர் அறைக்குள் சென்று படுத்து உறங்கிய விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் வசந்தராஜாவை, டிஸ்மிஸ் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைக் காவலர் ஆனந்தவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுவை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.