India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், புதுச்சேரியின் பல கல்லூரிகளில் தகுதியான முதல்வர், பேராசிரியர்கள், நூலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் – புதுவை எம்ஜிஆர் பேரவை தலைவர் முருகு. பத்மநாபன் அறிக்கையில்
கூறி இருப்பதாவது, புதுவையிலிருந்து பிரான்சு வருகை தரும் முக்கியஸ்தர்களை தமிழர் மரபுபடி வரவேற்பது எங்களது வழக்கம். அதன்படி லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களை வரவேற்றோம். மற்றபடி நானும் எனது நண்பர்களும் அவரது கட்சியில் சேரவில்லை, சேர்ந்து விட்டதாக வந்த செய்தி தவறு என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதுவை ஆட்சியர் குலோத்துங்கன், “விற்பனை நிலையங்களில், பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல்/டீசல் வழங்கக் கூடாது. மேலும் பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள விற்பனை நிலையங்களையும் கண்காணித்து, பாட்டில்கள் கேன்களில் பெட்ரோல்/டீசல் விற்பனை செய்யக் கூடாது என்ற கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

புதுவை கோர்க்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

மண்ணாடிப்பட்டு, பெரியபேட் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் முருகன், குப்பன் மற்றும் சாந்தப்பன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா பாஜக நிர்வாகி ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வேணுகோபால் (53), மணவெளி விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் லாரி சென்றபோது சிமெண்ட் தரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் முருகனை வேணுகோபால் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன் இணைந்து வேணுகோபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி, இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் 7 பேர் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அரசு நியமித்துள்ளது. இதில் முதல்முறையாக 2 இந்துக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது எனக் குற்றஞ்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.