India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெடி வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம். SHARE IT.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட புதுவை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் நம் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கிறது என்றால் அது புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த தீபாவளித் திருநாள் எல்லோருடைய வாழ்விலும் எல்லா வளமும் நலமும் மகிழ்ச்சியும் கொண்டுவந்து சேர்க்கும் நல்ல தொடக்கமாக அமையட்டும் என்றுகூறி புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்களிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.
புதுவை விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 1,579 சிறு, குழு விவசாயிகள் கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவணையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை ரூ.9.61 கோடி கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கடன்களை நேர் செய்து, புதிய கடன்களை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன அறிவுறுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவர் மைக்கேல் மிதிவண்டி பழுதுநீக்கும் தொழிலாளி. 2014-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபணமானதால் மைக்கேலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.டி.சுமதி நேற்று தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி டிஐஜியாக சத்திய சுந்தரம் ஐ.பி.எஸ், காரைக்கால் மாவட்ட எஸ்எஸ்பியாக எம்.வி.என்.வி.லெக்ஷ்மி சுஜன்யா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டிஐஜி பிரிஜேந்திர குமார் யாதவ் ஆயுதப்படை டிஐஜி ஆகவும், சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்எஸ்பியாகவும், குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.எஸ்.பி கலைவாணன் சட்டம்-ஒழுங்கு எஸ்.எஸ்.பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 26 போ், உதவி பேராசிரியா்கள் 35, காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 2, உதவி பேராசிரியா்கள் 17 என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பா் 21ஆம் தேதி மாலை 4.30 மணி வரையில் ஜிப்மா் இணையதளத்தில் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. கலைவாணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இணைய வழியில் வரும் எதையுமே நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். பல முறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தும் மக்கள் ஏமாந்து வருகின்றனர். இணைய வழியில் விலை குறைவாக கிடைக்கிறது. பெண்கள் சர்விஸ் டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்” என அறிவுறுத்தினார்.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அவர்கள் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய/மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். பொதுமக்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
புதுவையில் 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதன்படி, புதுவை -2336238, கோரிமேடு -2272913, வில்லியனூா்- 2668101, திருக்கனூா்- 2688101, மடுகரை- 2699101, பாகூா்- 2633101, காலாப்பட்டு- 2655873, திருபுவனை- 2641101 சேதராப்பட்டு- 2678101 ஆகிய தீயணைப்பு நிலையங்கள் தீபாவளி நாளில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என தீயணைப்பு கோட்ட அதிகாரி இளங்கோவன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.