Pondicherry

News May 11, 2024

புதுச்சேரி : ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சார்பில் புனித ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் முகாம் நலவழித்துறை கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் தேனாம்பிகை முன்னிலை வகித்தார். முகாமில் காரைக்காலை சேர்ந்த 28 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடப்பட்டது.

News May 11, 2024

புதுவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

image

வில்லியனூர் கணுவாப்பேட்டையில் 3 போ் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது 3 பேரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செயது 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல். செய்தனர்.

News May 11, 2024

அரசு கலைக்கல்லூரியில் மதிப்பீட்டுக் குழுவினர்

image

புதுச்சேரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினர் ஆய்வு செய்தனர். கல்லூரியின் பசுமை வனம் ,புத்தர் தோட்டம், வீரமங்கை வேலு நாச்சியார் தோட்டம் முதலான ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பீட்டு அறிக்கையைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். பிற்பகலில் மதிப்பீட்டுக் குழுவினருக்கு விடைதரும்விழா நடந்தது.

News May 10, 2024

புதுவையில் இன்று 96% டிகிரி வெயில்

image

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதில், புதுச்சேரி கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று 96% டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 10, 2024

புதுவை: 11 ஆம் வகுப்பு சேர்க்கை அறிவிப்பு

image

புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு, மே.13ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை மே.22ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஜூன்.06 ஆம் தேதி முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

News May 10, 2024

காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

image

காரைக்காலில், இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

புதுச்சேரி அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்!

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் 81.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் அரசு பள்ளியில் 65.42 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 56.89 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 73.89 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 10, 2024

புதுச்சேரி மற்றும் காரைக்கால் 10th RESULT

image

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 91.28 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.67 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.01 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்காலில் 78.20 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 71.90 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.35 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 10, 2024

புதுவையில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

image

புதுவையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 229 பள்ளிகளைச் சோ்ந்த 12, 613 மாணவ, மாணவிகளும், 599 தனித் தோ்வா்களும் எழுதியுள்ளனா் . காரைக்கால் பிராந்தியத்தில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 2, 479 மாணவ, மாணவிகளும், 259 தனித் தோ்வா்களும் என மொத்தம் 2, 738 பேரும் எழுதியுள்ளனா் . தோ்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு கல்வித் துறை இணையத்தில்
வெளியிடப்படுகிறது

News May 10, 2024

புதுவையில் ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

image

புதுவையில் நீட் அல்லாத பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கடந்த 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனா். அதனடிப்படையில், 9, 993 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வருகிற 22-ஆம் தேதி வரையில் பெறப்படவுள்ளன . வருகிற ஜூன் 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.