India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது அங்கு, அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு, புதுச்சேரியை சேர்ந்த, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சியில், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். வரும் 13ம் தேதி பயிற்சி துவங்குகிறது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கான பணியிடம் நிரப்பப்படவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.11.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விவரங்கள் LINK
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் போலி சான்றிதழ் கொடுத்து சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது இந்த விசாரணை அடிப்படையில்
போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 44 பேரின் சேர்க்கை ஆணை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் உள்ள 73 இடங்களில் 44 பேர் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாதுக்கு டிச.20ஆம் தேதி முதல் தனியாா் விமான சேவை மீண்டும் தொடக்கம். இதுகுறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்க்கு 70 பயணிகள் செல்லும் வகையில் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் டிச.20-ஆம் தேதி தொடங்குகிறது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்தச் சேவை தொடரும் என அறிவித்துள்ளது.
புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஏடிஆர் 72 ரக விமான சேவையை வரும் டிசம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. இச்சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும் என்றார்.
புதுச்சேரி தட்டான்சாவடி சேர்ந்த தண்டபாணியிடம் ரூ.44,000, மூலக்குளத்தை சேர்ந்த டீனாவிடம் ரூ.93,000, நிரவியை சேர்ந்த முருகவேலிடம் ரூ.15,000, குயவர்பாளையம் மாதவன் ரூ. 30,000, அய்யங்குட்டியை சேர்ந்த முத்துவேல் ரூ.11,300, காந்தி நகரை சேர்ந்த உதயக்குமார் ரூ.5,000, சண்முகாபுரம் தினேஷ்குமார் ரூ.31,350 என மொத்தம் 7 பேர் ரூ.2 லட்சத்துக்கு மேல் மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசார் நேற்று விசாரணை செய்தனர்.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நேற்று காலை புதுவை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, புகார் மனுக்கள் மீதான விசாரணை நிலை, ரோந்து வாகனங்களை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தக் குமார், விஜயக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஆலங்குப்பத்தை சேர்ந்த பெண் விந்தியா[22] இன்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
தீபாவளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்களிடம் உறுதியளித்ததைப் போன்றே, கவர்னர் கைலாஷ்நாதன் 1,500 ரூபாய் தீபாவளி உதவித் தொகை வழங்குவதற்கான கோப்பில் நேற்று கையெழுத்திட்டார். அதையடுத்து இன்று முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் தருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.