India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவசயிலம் கோயிலில் ஜோதிர்லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த வழிபாட்டில் இரண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க பூஜைகள் செய்தார்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தேர்தல் கண்காணிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க, அதிகச் செலவு செய்யப்படும் தொகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்படும்” என்று கூறினார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

புதுச்சேரி ஜிப்மரில் (JIPMER) ‘Connaissance – 8th Edition’ என்ற தலைப்பில் 3 நாட்கள் சர்வதேச இளங்கலை மருத்துவ மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மீனு சிங் தலைமை தாங்கினார். ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வாழ்த்திப் பேசினார். இதில் இந்தியா முழுவதும் உள்ள 200 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கள் கடைகள், சாராயக் கடைகள், மதுபான கடைகள் ஆகியவை தினமும் இரவு 10.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று காரைக்கால் துணை ஆணையர் பூஜா அறிவித்துள்ளார்.

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கலால்துறை அறிவுறுத்தியிருந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத மதுக்கடைகளை ஆய்வு செய்து சீல் வைக்க கலால்துறை ஆணையர் விக்ராந்த் ராஜா உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், விதிமுறைகளை மீறிய 64 மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்கவும், சட்டவிரோத பணம், மதுபானம், பரிசு பொருட்கள், ஆயுதம் போன்றவை கொண்டு செல்வதை தடுக்க, சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீஸ் பணியாளர்களுடன் 78 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.