Pondicherry

News March 17, 2026

புதுவை: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர்

image

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவக்கினார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

News March 17, 2026

புதுச்சேரி தேர்தல் கண்காணிப்புப் பணிகள் ஆய்வு

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன், தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ‘1950’ என்றை கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ‘cVIGIL’ செயலி மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து ஆய்வு செய்த அவர், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நெடுங்காடு: கட்டிட தொழிலாளி தற்கொலை

image

நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி வேலு (45). இவருக்கும், இவரது மனைவி சகாயமேரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு சகாயமேரி வெளியில் சென்றுள்ளார். அப்போது வேலு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது நெடுங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 17, 2026

புதுச்சேரி: 14 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு அவகாசம்

image

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 7ம் தேதி வரைதான் வேட்பாளர்கள், பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் 14 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்துக்கு உள்ளது. இந்த குறைந்த நாட்களில் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கட்டாயத்துக்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

News March 16, 2026

புதுச்சேரி: முதல் நாளில் வேட்புமனு எதுவும் இல்லை

image

புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் முதல் நாளான இன்று எந்த அரசியல் கட்சியினரும் அல்லது சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் முதல் நாள் அமைதியாகவே நிறைவடைந்தது.

News March 16, 2026

புதுச்சேரி: வேட்பு மனு தாக்கல் குறித்து பயிற்சி வகுப்பு

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு, நாளை (மார்ச்.17) நண்பகல் 2.00 மணிக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 16, 2026

புதுச்சேரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!