Pondicherry

News November 18, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை 

image

புதுச்சேரி அருகே வானூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர் மின்பாதையில் நாளை 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வானூர், நைனார் மண்டபம், காட்ராம்பாக்கம், நாராயணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று கண்டமங்கலம் மின் அலுவலக செயற்பொறியாளர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

காரைக்கால் அருகே எம்.எல்.ஏ ஆய்வு

image

காரைக்கால் அடுத்த திருபட்டினம் எடத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் அவர்கள் மழையால் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றுமாறும் மழைநீர் வடியும் வகையில் சாலையை சீர் செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

News November 17, 2024

புதுச்சேரியில் தேசிய கல்வி மாநாடு 

image

புதுச்சேரியில் தேசிய கல்வி மாநாடு நவ.21 முதல்  24ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டின் தொடக்கமாக  மாணவர்கள் பேரணி நடைபெறுகிறது. செயலர் தொடங்கிவைக்கிறார். மாநாட்டுத் திடலில் 26 அரங்குகள் கொண்ட கண்காட்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைக்கிறார். 2 ஆம் நாள் (நவ.22) கர்நாடக இசை நிகழ்ச்சி விழாவில் புதுவை துணைநிலை, முதல்வர் கலந்து கொள்கின்றனர் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

புதுவையில் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தீயணைப்புத் துறையின் வாகன ஓட்டுநா் நிலை 3 பணிக்கான வாகன இயக்கும் தோ்வுகள் நவம்பா் 23, 30 மற்றும் வரும் டிசம்பா் 1, 8 ஆகிய தேதிகளில் வாகனங்களை இயக்கிக் காட்டும் தோ்வு நடைபெறவுள்ளது. காா் இயக்கும் தோ்வானது புதுச்சேரி மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

News November 17, 2024

பாதுகாப்புப் பணியில் 300 போலீசார் -டிஐஜி தகவல்

image

புதுச்சேரி மாநில காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) ஆா்.சத்தியசுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “புதுச்சேரி சிறந்த சுற்றுலாத்தலமாக இருப்பதால் வார இறுதி நாள்கள், விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால் வாகனங்கள் நிறுத்துதல் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்போவதாக தெரிவித்தார்

News November 16, 2024

முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை 

image

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கலெக்டர் குலோத்துங்கனிடம் அளித்த மனுவில் சென்டாக் மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு 2ம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்களில், பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளனர் சான்றிதழ்களை ஆய்வு செய்து முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்

News November 16, 2024

9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., அங்கீகாரம் ரத்து

image

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயங்கி வந்த என்.சி.சி சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சியாளர்கள் இல்லாததால் என்.சி.சி. பாட பிரிவு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தற்போது நாவலர் நெடுஞ்செழியன், தொண்டமாநத்தம் பள்ளியில் மட்டுமே இயங்கி வருகிறது. மீதமுள்ள 9 பள்ளிகளில் என்.சி.சி.,ஜூனியர் பிரிவு ரத்தாகி உள்ளது என்றார்

News November 16, 2024

புதுவை கலெக்டர் எச்சரிக்கை

image

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று கூறியதாவது, “சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அகற்றவில்லை. இதனால் இடித்து அகற்றி வருகிறோம். மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்தால் முதலில் அபராதம், அடுத்து வழக்கும் பதிவு செய்யப்படும்” என எச்சரித்தார்.

News November 15, 2024

புதுச்சேரி காரைக்கால் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.15) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்திலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

புதுவையில் உள்துறை அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு காவல் துறை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் இன்று சட்டமன்றம் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி டிஜிபி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் செயலர் கேசவன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!