India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்று திறனாளர்கள் தினம் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி, இந்திரா காந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது. தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தெரிவுநிலை தேர்வின் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்று (19ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி நாள் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி இன்று வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 10, 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் இளநிலை பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் படித்து வருகிறார். வரலாறு படிக்கும் மாணவரான சூர்ய நாராயணன் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், மாணவியின் புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது இதை எதிர்த்து ஆயுள் தண்டனை கைதிகள் நேற்று சமையல் வேலை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் விசாரணை கைதிகள் மூலம் சமையல் செய்து மற்ற கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
புதுவை வில்லியனூர் ஆரியபாளையம் மேரி பொனாண்டஸ், முன்னாள் ராணுவ வீரா். இவர் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். அவரது உறவினர் வீட்டை கண்காணித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் 500 கோடி ரூபாய் செலவில் கடல்நீர், மழை நீர் மற்றும் ஆற்று படுகை நீரை சுத்தப்படுத்தி குடிநீராக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக 7 கோடி ரூபாய் செலவில் ஆற்று நீரை சுத்திகரித்து விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.