India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மதகடிப்பட்டில், டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர், பங்கு சந்தையில் மியூச்சுவல் பண்ட் மூலம் டிரேடிங் செய்து வருகிறார். அவரிடம் மர்ம நபர் பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி அவரிடம் லிங்க் மூலம் 1.31 கோடியைப் பெற்று ஏமாற்றி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு, அந்த இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ளன. அவற்றில் மழை தண்ணீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்கி நின்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது., மழை நீர் தேங்காமல் சரிசெய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.தவறினால் கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதே போல் குமரகுரு பள்ளத்தில் 12 மாடியில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட 45.50 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
காரைக்கால் நிர்வாகம் சார்பில் காரைக்கால் பெண்கள் மாநாடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், சரவணகுமார், ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சாதனை புரிந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு நடத்திய புதுச்சேரி சென்டாக் அடுத்து எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான எம்.டி., எம்.எஸ்., இறுதி தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 415 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு நடத்திய புதுச்சேரி சென்டாக் அடுத்து எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான எம்.டி., எம்.எஸ்., இறுதி தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 415 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
புதுவை மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் குற்றஞ்சாட்டினார். புதுவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது புதுவை கூறியதாவது, துறை சொத்துகள் குறைத்து மதிப்பிடப்பட்டு தனியாருக்கு வழங்கப்படவுள்ளன.மின் கட்டண வழங்கப்படவுள்ளன.மின் கருத்து கேட்பது போல, தனியார் மயம் குறித்தும் மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும் என்றார் என்றார்.
புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் புதுவை மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்ஸோ குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் பள்ளியின் முதல்வர் தலைவராகவும், துணை முதல்வர் அல்லது தலைமையாசிரியை துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்று திறனாளர்கள் தினம் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி, இந்திரா காந்தி விளையாட்டு திடலில், வரும் 23ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது. தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.