Pondicherry

News November 24, 2024

புதுவை: மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 7 பேர் கைது

image

புதுவை ஓதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சேரி பழைய துறைமுக வாகனம் நிறுத்துமிடத்தில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட உப்பளம் பகுதியை சேர்ந்த அருண் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத், செல்வம், குமரன், சென்னையை சேர்ந்த ராஞ்சித் நல்லவாடு பகுதியை சேர்ந்த சராதி என்ஜினீயரிஸ் தோட்டம் பகுதியை சேர்ந்த ஷயாத் ஆகியோர் மீது போலீசார் இன்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News November 24, 2024

காரைக்கால் அருகே 9 பேர் கைது

image

காரைக்கால் நாகப்பட்டினம் சாலையில், நிரவி அருகே உள்ள தனியார் ரெஸ்டோ பார் ஓட்டல் அறையில் இருந்து திடீரென புகை அதிக அளவில் வெளியேறியது. தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி புகையை கண்ட போலீசார், அறையில் 2 நாட்களாக கஞ்சா அடித்து மயங்கி கிடந்த 8 வாலிபர்கள், ஓட்டல் மேலாளர் உட்பட 9 பேரை நேற்று கைது செய்தனர்.

News November 24, 2024

புதுவை மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்குமாறு புதுவை மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 27-ஆம் தேதி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.

News November 23, 2024

இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்

image

புதுச்சேரி எல்லையில் உள்ள நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை சாராயக் கடையில் தமிழக டிஎஸ்பி தலைமையில் போலீசார் அதிரடியாக திடீர் சோதனையில் இன்று ஈடுபட்டனர். இதற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாநில போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரி போலீசாரின் அனுமதியின்றி தமிழக போலீசார் சோதனை செய்ய எதிப்பு தெரிவித்தனர்.

News November 23, 2024

வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

image

புதுவை தொழிலாளர் துறை அரசு காப்பீட்டு கழகத்தின் துணை இயக்குனர் கணேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தொழிலாளர் அரசு காப் பீட்டு கழகம் மற்றும் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு, குறைதீர்ப்பு கூட்டம் வரும் 27-ந் தேதி நடக்கிறது. காலை 10 முதல் மாலை 4 மணிவரை புதுவையில்உள்ளவர்களுக்கு திருபுவனை சம்வர்தனா நிறுவனத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது என்றார்

News November 23, 2024

புதுவையில் வாக்காளர் பட்டியல் முகாம்

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி இன்றும் நாளையும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் குறித்த படிவங்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

News November 23, 2024

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.66 கோடி ஒதுக்கீடு

image

புதுச்சேரியில் நடப்பாண்டில் (2024-25) முதற்கட்டமாக 77 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கு தற்போது 2 கோடி ரூபாய் வீதம் அரசு 66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை நேற்று வெளியிட்டுள்ளது. இப்போது, மேலும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகளும் உற்சாகமடைந்துள்ளனர்.

News November 22, 2024

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது குறித்தான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமை வகித்தார். மேலும் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செவ்வேல், காரைக்கால் அரசு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 22, 2024

புதுவை அருகே டிரைவர் தற்கொலை

image

புதுவை உப்பளம் நேதாஜி நகர் லிஷேந்திரன், டிரைவர். இவர் பிரான்ஸ் நாட்டில் வேலை செய்வதற்காக தனியார் ஏஜென்சியில் பணம் கட்டி, 2 ஆண்டுகளாக விசாவுக்காக காத்திருந்துள்ளார். இருப்பினும் வேலை கிடைக்காததால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 22, 2024

புதுச்சேரி: மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் வெளியீடு

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் தேசிய கல்வி மாநாடு ‘ஞான கும்பமேளா’ புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும், மத்திய தமிழ் ஆய்வு மையம் சார்பில் திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இன்று வெளியிடப்பட்டது.

error: Content is protected !!