India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றானது வீசத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து சுமார் 40 கீ.மி தொலைவில் மையம் கொண்டுள்ள புயலால் புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரை பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. உங்கள் பகுதியில் காற்றின் வேகம் எப்படி உள்ளது ? கமெண்டில் தெரிவிக்கவும்..
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் இன்று (நவ.30) மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து 50 கீ.மி தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் மரக்காணம் அருகே முழுமையாக கரையை கடக்கும் என்றும், இதனால் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் புயல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின்தடை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு அவசர கால கட்டுப்பாட்டு அறையை 0413-2339532, 1800-425-1912 அல்லது 1912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள நிவாரண முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காலை முதல் 1300 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டுவிடும். சுற்றுலா பணிகளுக்கு உணவு மற்றும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று அறிவித்தார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அருகே மரக்காணத்தில் புயல் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரியில் இருந்து சுமார் 120 கீ.மி தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கீ.மி வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் புதுச்சேரி அருகே மரக்காணத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முதல்வர் ரங்கசாமி, கடற்கரையை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இயங்காதவாறு பார்க்க அறிவுறுத்தினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வட தமிழகம் கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. காரைக்காலில் 5ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கனமழை எதிரொலி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.