India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புதுச்சேரியில் நாளை (7-12-24) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இணையவழி குற்றம் சம்பந்தமாக சந்தேகம், குறை இருந்தால் மற்றும் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியப்படுத்தலாம். மேலும் அதற்கு உண்டான தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதி உதவியின் கீழ் கொரோனா காலத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான காசோலையினை, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இன்று தனது அலுவலகத்தில் வழங்கினார். இதில் மூன்று குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் 7ஆம் தேதி (புதன்கிழமை பாடத்திட்டம்), 14ஆம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ஆம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு 3 நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்தார்.
ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 06.12.2024 முதல் 17.12.2024 வரை காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணத்தை விண்ணப்பத்தை செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் மாவட்ட அறியலாம்
புதுவையில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் இன்று (டிச.06) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்நாளில், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் ஒன்றிணைந்து உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி,மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புயல் கன மழை, பலத்த காற்றினால், புதுச்சேரி முழுவதும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு, கருதி அனைத்து மின்தடங்களிலும் மின் துண்டிப்பு செய்யப்பட்டது. மரங்கள் மேல்நிலை மின்பாதைகளின் மேல் விழுந்ததால், 212 கி.மீ., துாரம் மின் பாதைகள், 51 மின் மாற்றிகள், 1,512 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
புதுவை கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.15-ஆம் தேதி நடைபெறுகிறது. புதுவையில் 15, காரைக்காலில் 2 ,மாஹே மற்றும் ஏனாமில் தலா 1 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வுக்கூட சீட்டை தோ்வா்கள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் டிச.5-ஆம் தேதி காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என புதுவை தலைமை செயலக சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் மழை நிவாரண முகாம்களாக செயல்படும் தவளக்குப்பம், காக்கையன்தோப்பு, கூனிச்சம்பேட், கரையான் புத்தூர், சின்ன கரையான் புத்தூர், கடுகனூர், கிருஷ்ணாவரம், மணமேடு, திருக்கனூர், செட்டிப்பட்டி, பண்ட சோழநல்லூர், பூரணாங்குப்பம், டி என் பாளையம், பனையடி குப்பம், பனித்திட்டு, நத்தமேடு அரசு பள்ளிகள் மற்றும் பாகூர் கொம்யூன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.