Pondicherry

News December 9, 2024

புதுச்சேரி ஜிப்மர் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

image

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2025 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதில் 17 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கில புத்தாண்டு, போகிப் பண்டிகை, திருவள்ளுவர் தினம் உழவர் திருநாள், கந்தூரி விழா உட்பட 56 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

News December 9, 2024

புதுவையில் இன்று மின்தடை

image

புதுவை இசிஆர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 9 ஆம் தேதி காலை 10 முதல் 5 மணிவரை கவுண்டன்பாளையம் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, கஸ்தூரிபாய் நகர், பேட்டையன் சந்திரம், திலகர் நகர் ஒரு பகுதி, குண்டுப்பாளையம், நவசக்தி நகர் ஒரு பகுதி, வி.வி.பி. நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் மின் தடை என அறிவிக்கப்பட்டது.

News December 8, 2024

முன்னாள் முதல்வர் மறைவு: கவர்னர் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான D.இராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (08-12-2024) காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் கட்சியினர் அனைவருக்கும் வருத்தத்தை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

News December 8, 2024

முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற அவர், முதல்முறையாக புதுச்சேரி வரலாற்றில் 1980 – 83 வரை முதல்வராக ( திமுக) இருந்தவர். அதன்பின் திமுகவுக்கும்- காங்., கட்சிக்கும் இடையிலான கடும் போட்டியில் 1990 – 91 வரையும் முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 8, 2024

மீனவர் வலையில் சிக்கிய 1.5 டன் ராட்சத திருக்கை மீன்

image

வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் விசை படகு மூலம் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்.படகில் இருந்தவர்கள் பெரிய மீன், வலையில் சிக்கியதை உணர்ந்தனர். சிக்கியது ராட்சத திருக்கை மீன் என தெரியவந்தது. அதனை தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

News December 8, 2024

தீபாவளி சீட்டு மோசடி -தம்பதி சிறையில் அடைப்பு

image

புதுவை அடுத்த தமிழகப் பகுதியான நாராயணப்புரத்தை சேர்ந்தவர் புருேஷாத்தமன் – கீதா தம்பதி. இருவரும் தீபாவளி நகை சீட்டு நடத்தி, 2 கிராம் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி வழங்குவதாக கூறியுள்ளார். மேலும், கரசூர் பகுதியை சேர்ந்த 132 பேர் 16 லட்சத்து 58 ஆயிரம் வரை சீட்டு காட்டியுள்ளனர். பின்னர் தம்பதி தீபாவளி முடிந்ததும் தலைமறைவு ஆகினர். புகாரை அடுத்து நேற்று சேதராப்பட்டு போலீசார் தம்பதியை கைது செய்தனர்.

News December 7, 2024

மறுசுழற்சி ஆலமரம் மக்கள் பார்வைக்கு அர்ப்பணிப்பு

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய மரமான ஆலமரம் 700 கிலோ மறுசுழற்சி இரும்பினால் உருவாக்கி பொதுமக்களின் பார்வைக்காக மூன்று நாள் கண்காட்சியாக நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

News December 7, 2024

புதுச்சேரியில் 11 முதுநிலை எழுத்தர்கள் பணியிடமாற்றம்

image

புதுச்சேரியில் தற்போது அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குழந்தைகள் மருத்துவமனை, சட்டத் துறை, பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, மின் துறை, அரசு பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 11 முதுநிலை எழுத்தர்களை, அதே பதவி அந்தஸ்தில் உள்ள வேறு துறைகளுக்கு இடம் மாற்றி கவர்னர் உத்தரவுப்படி சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று அறிவித்தார்.

News December 7, 2024

புதுச்சேரி-கடலூர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து தொடக்கம்

image

ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பால சீரமைப்புப் பணி சுமார் ரூ.40 லட்சத்தில் நடைபெற்ற நிலையில், இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பால சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமை இரவு முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து, இன்று (டிச.7) சனிக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்து பாலத்தில் தொடங்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று தெரிவித்தார்.

error: Content is protected !!