Pondicherry

News March 21, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

புதுச்சேரி: விசா காலாவதி – 6 வெளிநாட்டினர் கைது

image

புதுச்சேரியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரை பார்க்க வந்த உறவினர்கள், கடந்த 8 ஆண்டுகளாக விசா முடிந்தும் தங்களது நாட்டிற்கு திரும்பாமல் புதுச்சேரியில் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. குடியேற்ற பணியகம் மண்டல பதிவு அலுவலர் அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் நடவடிக்கை எடுத்து, உகாண்டா மற்றும் தான்சானியா நாடுகளைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

புதுச்சேரி: ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது. தேர்தலை பாது காப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

News March 21, 2026

புதுவையில் 3 மருந்துகள் விற்பனைக்கு தடை

image

புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்து விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி தரமற்ற மருந்துகளுக்கு தடை விதித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுடெல்லியை சேர்ந்த மெஸ்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டிரினோல்-பி, போனிமேக்ஸ்-பிளஸ் மற்றும் கால்வாபார்க் ஆகிய 3 மாத்திரைகள் விற்பனை செய்ய புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

புதுச்சேரி: லாரியில் சிக்கிய வாலிபர்

image

கோட்டுச்சேரி, திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி சூசைநாதன் மகன் சஞ்சய் (21), இவர் கோட்டுச்சேரி மெயின்ரோட்டில் புதிதாக கட்டப்படும் வீட்டில் வேலை செய்தபோது, மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது ஏறி மணலை தள்ளிவிட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி தொட்டியில் சஞ்சயின் இடது கால் சிக்கி, காயமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2026

புதுச்சேரி: கல்லூரியில் இலக்கியத் திருவிழா

image

மதகடிப்பட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில், அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமையில் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. பொருளாளர் ராஜராஜன், தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 150க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News March 21, 2026

புதுவை: பல்கலைக்கழக பேராசிரியருக்கு மகளிர் விருது

image

புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுகள் துறை பேராசிரியை சாருமதிக்கு, மகளிர் பொறியியல் நிறுவனம் சார்பில் “எஸ்டிஜி (SDG) தொலைநோக்கு மகளிர் விருது” வழங்கப்பட்டுள்ளது. அவரது சிறப்பான ஆராய்ச்சி மற்றும் பங்களிப்பிற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இதற்காக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, பேராசிரியை சாருமதியை நேற்று நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

News March 21, 2026

புதுச்சேரி: பெண்களுடன் தகராறு – வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி பாவாணர் நகரில், பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர், தற்கொலை செய்யப் போவதாக வீடியோ பதிவு செய்து மனைவிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!