India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் பா.ஜனதா கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் தேசியத்தலைவர் நிதின் நலின் தலைமையில் நேற்று கூட்டம் கூடியது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். பா.ஜனதா போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் நேற்று டெல்லியிலிருந்து வெளியிட்டார்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில், கடலூர் கல்லூரிப் பேராசிரியர் சியாமளா எழுதிய ‘ஆவுடை அக்காள்’ என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிபதி சத்தியமூர்த்தி நூலை வெளியிட்டார். மூத்த பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் புதுச்சேரி மற்றும் கடலூரைச் சேர்ந்த பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

புதுச்சேரி 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தணித்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, வேட்பளார்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியில் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் நாளை வெளியிடுகிறார். இத்தகவலை அனைவரும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயரில் அசையும் சொத்துகள் ₹16.97 லட்சமும், அசையா சொத்துகள் ₹27.10 கோடியும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துகள் ₹8.48 கோடியும், அசையா சொத்துகள் ₹33.12 கோடியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, A Form மற்றும் B Form ஆகியவற்றைப் பெற்றனர். இந்த நிகழ்வின் மூலம் பாஜக கட்சியின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைப்பெற்று வருகிறது. இதில் லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் புதுவை மாநில சபாநாயகர் சப்தகிரி வி.பி.சிவக்கொழுந்து இன்று (மார்ச் 21) சனிக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை பாஜக தேர்தல் குழு இன்று வெளியிட்டுள்ளது. மன்னாடிபேட் – நமச்சிவாயம், ஊசுடு – தீப்பாய்ந்தான், கலாப்பட்டு – கல்யாணசுந்தரம், ராஜ் பவன் – ராமலிங்கம், முதலியார்பேட்டை – ஜான்குமார், மணவெளி – செல்வம், திருநல்லார் – ராஜசேகரன், நெரவி-டி.ஆர். பட்டினம் – மீனச்சிசுந்தரம், மாகே – ஏ. தினேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ள NR காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவரிடம் ₹21.25 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ₹27.78 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மொத்தமாக அவரது சொத்து மதிப்பு ₹49 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.